அத்தியாயம் 20

3.3K 189 58
                                    

இரவு,பகல் என்று நாட்கள் அழகாகச் சென்று கொண்டிருக்க பதினொரு வருடங்களாக ஆராதனாவின் நினைவில் வாழ்ந்தவன் அவள் வந்து விட்டு சென்று இந்த ஒன்றரை மாதமும் அவள் இல்லாத வாழ்க்கையை எண்ணி தவித்தான் சக்திவேல்.

ஒவ்வொரு நொடியும் அவள் முகம் தன் முன் வர அவளை நினைத்து தொழிலும் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினான்.

தேன்மொழியிடம் இல்லையென்றால் தன் தந்தையிடமாவது அவளை பற்றி கேட்டு அவளை காண வேண்டும் என மனம் ஏங்கினாலும் ஏதோ ஒரு தடுமாற்றம் அவனை தடுத்தது.

அதுவும் தான் கௌதமை பற்றி தவறாக நினைத்து வேற மனதை வாட்ட தனக்குள்ளே மருகிக் கொண்டிருந்தான்.

"அம்மு நான் உன்னை பார்க்கணும்..."என்று புலம்பியவாறு வேளையில் கவனம் இல்லாமல் டேபிள்ளில் தலை சாய்ந்து படுத்துக்கொண்டு இருந்தவனை ஒரு கரம் வந்து இதமாக தலையை தடவி விட சுகமான அந்த வருடலில் வேகமாக நிமிர்ந்தான்.

நிமிர்ந்தவனின் முன்பு அவனது அம்மு நிற்க தவிப்புடன் எழுந்தவனோ தான் காண்பது கனவா,நிஜமா என்ற வியப்பில் அவளையே பார்த்து விழித்துக் கொண்டு இருந்தான்.

"ஐ லவ் யூ, லவ் யூ சோ மச் சக்திதிதிதிதிதி..." என்றவாறு அவனின் நெஞ்சில் சாய்ந்து அணைத்துக் கொள்ள அதன் பிறகே இது நிஜம் என்பதை உணர்ந்தான்.

ஆராதனாவை தன்னிடம் இருந்து விலக்கியவன் அவள் விழிகளை காண அவளது தவிப்பும் அவளுக்கு தன் மேல் இருக்கும் காதல் அனைத்தும் அதில் தெரிய அவளை எதுவும் பேச விடாமல் இறுக தழுவி அணைத்தான்.

"ஐ லவ் யூ டி அம்மு..." கூறியவாறு முகம் முழுவதும் முத்த மழை பொழிய அவன் முத்தத்தில் திக்குமுக்காடி போனாள் ஆராதனா.

"அம்மு நீ இல்லமா நான் எவ்வளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா..? என்னால ஒரு வேலையும் செய்ய முடியல உன் நினைப்பாவே இருக்கு...? ஏன் என்னை விட்டு போனே அம்மு. இனிமே போக மாட்டேல எனக்கு நீ வேணும் நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடி..? சின்ன வயசுல இருந்து நான் உன்னை எவ்வளோ நேசிக்கிறேன் தெரியுமா..?ஆனா நீ என்னை விட்டு போய்க்கிட்டே இருக்க..?இனிமே போக விட மாட்டேன் உன்னை யாருக்கும் நான் கொடுக்க மாட்டேன்..?"

உன் அன்பில் உன் அணைப்பில்..!Where stories live. Discover now