அத்தியாயம் 2

5.8K 211 39
                                    

"ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ...
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ... ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ...
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ..!"

என்ற பாடல் ஒலிக்க வீடு முழுவதும் சாம்பிராணி புகையின் வாசம் பரப்பி கொண்டிருக்க டைனிங் டேபிலில் அமர்ந்து காய்கறிகளை வெட்டி கொண்டிருந்தார் வாசுகி .

"லட்சுமி இங்க வா..!காய் எல்லாம் வெட்டிட்டேன் இதை எடுத்து பிரிட்ஜ்ல வை மதியம் சாப்பாடு பண்ணும் போது எடுத்துக்கலாம். அப்பறம் சாமி போட்டோவுக்கு பூ போட்டுட்டையா ரஞ்சித் வருவான் சாமி கும்பிட..."

"ம்ம்ம் நீங்க சொன்ன எல்லா வேலையும் முடிச்சிட்டேன்மா...! நான் போய் தம்பிக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்மா..! "என்க,

அதே நேரம், "அம்மா சாப்பாடு எடுத்து வைக்கச் சொல்லுங்க இன்னைக்கு ரொம்ப வேலை இருக்கு சீக்கிரம் போகணும்..." கூறிக் கொண்டே மாடியில் இருந்து இறங்கினான் ரஞ்சித் குமார்.

ஆறடிக்கும் மேல் உயரமும் மாநிறமும்,முழங்கை சட்டையை மடக்கி மீசையை முறுக்கிக் கொண்டு வேட்டி சட்டையில் அனைவரையும் அச்சமடைய செய்யும் அவனது நடை கண்களால் எரிச்சரிக்கும் பார்வை அனைவரிடமும் பாசம் கொள்ளும் மனது அவனின் தந்தையை போல் இருப்பவனை பார்த்தவாறு இருந்தனர் அங்கே வேலை செய்யும் அனைவரும்.

பூஜை அறைக்குச் சென்று அங்கே இருந்த தந்தையின் புகைப்படத்தையும் மற்ற கடவுளையும் வணங்கியவன் நெற்றியில் திலகம் இட்டு வெளியே வர அனைவரும் தன்னை பார்ப்பதை உணர்ந்து அனைவரையும் ஒரு பார்வை பார்க்க அவர்களது வேலையை பார்க்கச் சென்றனர்.

"அம்மா ஏன் எல்லாரும் அப்பறம் நீங்களும் என்னையே பார்க்குறீங்க நான் என்ன பூதமா,பேயா இல்ல கோமாளியா...?"

உன் அன்பில் உன் அணைப்பில்..!Où les histoires vivent. Découvrez maintenant