அத்தியாயம் 27

2.8K 187 58
                                    


எதுவும் பேசாமல் அமைதியாக காரை ஓட்டிவரும் தன் மகனை புரியாமல் பார்த்தார் கணேசமூர்த்தி.

"டேய் மருது எதுக்குடா அமைதியாக வரே ..?உங்க அப்பன் ஜெயிலுக்கு போனது உனக்கு கேவலமா இருக்குதாடா..?"

"ஐயோ அப்பா அப்படியெல்லாம் இல்ல எதுக்கு இப்படியெல்லாம் பேசுறீங்க..?"

"சரி ஏன் அமைதியாக வர அதைச் சொல்லு..?"

"எல்லாம் உங்களை ஜெயிலுக்கு அனுப்புன அந்த சக்தியை பத்தி தான் யோசிச்சிக்கிட்டு இருந்தேன். அவன் மட்டும் சந்தோஷமா இருக்கான்ப்பா..."

"விடுடா நம்மளுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் அவன் சாவு என் கையில தான்டா..."

"உங்களுக்கு ஒன்னு தெரியுமா..? ஊருக்குள்ள தான் அந்த சக்தியும்,ரஞ்சித்தும் பகையாளியா தெரியுறாங்க..?ஆனா ரெண்டு பேரும் ஒற்றுமையா இருக்குற மாதிரி தான் தெரியுது. சரிப்பா வீடு வந்துருச்சி இறங்குங்க காரை நிறுத்திட்டு வரேன்..."

"ம்ம்ம் சரி..."என்றவாறு காரினை விட்டு இறங்கி வீட்டுக்குள் செல்ல ஹாலில் அமர்ந்திருந்த சரஸ்வதி(மருதுவின் தாய்) தன் கணவர் வருவதை துச்சமாக கண்டு தன் அறைக்குச் சென்று கதவினை சாத்தினார்.

மனைவியின் செயலில் கோவம் கொண்ட கணேசமூர்த்தி கத்த வேகமாக வந்த மருது தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

அங்கே அறையில் செல்வக்குமார் அமர்ந்திருக்க, "வாங்கப்பா நல்லாயிருக்கீங்களா..." என்றதும்,

"எங்கடா நல்லாயிருக்குறது பார்த்தேலே நான் கட்டி வீட்டுக்கு கூட்டிட்டு வந்த இவளே என்னை இப்படி துச்சமா பார்க்குறா..?இந்த லட்சணத்துல நான் வெளியே போனா எல்லாரும் எப்படி பார்ப்பாங்க. எல்லா இந்த சக்தி குறுக்கே வந்ததுனால தான்.." கோபமாக இருவரிடமும் கத்தினார். இருவரும் சேர்ந்து சிறிது நேரத்தில் அவரை சமாதானப்படுத்தினர்.

"சொல்லுங்கப்பா நாங்க என்ன பண்ணனும் இப்போ...?"

"இப்போ ஒன்னும் பண்ண வேண்டாம் நாம்ம எப்பவும் போல தான் இருக்கணும் எல்லாரும் முன்னாடி. திருவிழா வர போகுதுன்னு கேள்விப்பட்டேன் அது முடியட்டும் அதுக்கு அப்பறம் நம்ம ஆட்டத்தை வைச்சிக்கிடலாம்..."

உன் அன்பில் உன் அணைப்பில்..!Where stories live. Discover now