அத்தியாயம் 40

3.2K 198 92
                                    


மறுநாள் விடியல் மண்டபத்தில் தேன்மொழி இல்லை என அறிந்ததும் ஒவ்வொரு வரும் ஒவ்வொன்றாக பேச ஆரம்பித்தனர்.

"பிள்ளையை அவ இஷ்டப்படி செல்லம் கொடுத்து வளர்த்தா இப்படி தான் இருக்கும். நினைச்சேன் இந்த பிள்ளை ஊரை சுத்தம் போதே என்னைக்காவது ஓட தான் போகுதுன்னு அதே மாதிரியே நடந்துருச்சி..?"

"பெத்தவங்க ரெண்டு பேருல யாராவது ஒரு ஆளாவது கண்டிச்சி வளர்க்கணும் செல்லம் கொடுத்து என் பொண்ணு சொல்லுறது தான் சரி அது தான் சட்டம் அது படி தான் நடக்ககணும் சொன்னா எப்படி தான் நடக்கும்..?"

"இந்த வேல்முருகன் எவ்வளோ பெரிய மனுஷன் அவர் பொண்ணை ஒழுக்கமா வளர்க்க தெரியல.இவர் எல்லாம் என்ன மனுஷன்..?"என்று அங்கே இருக்கும் பெரியவர்கள் அனைவரும் அருகில் இருப்பவர்களிடம் வேல்முருகன் காதுபட பேசி கொண்டனர்.

மாப்பிளை வீட்டாரும் அவர்கள் பங்குக்கு ஏதேதோ பேசிக் கொண்டே செல்ல, "இல்ல என் பொண்ணு ஓடி போக மாட்டா இதுக்கெல்லாம் காரணம் அந்த ரஞ்சித் என்னை பழிவாங்க அவன் தான் என் பொண்ணை கடத்திட்டு போயிருப்பான். டேய் தமிழரசு போலீஸ்க்கு போன் பண்ணு..?"என்றவாறு கோபமாக ரஞ்சித் ஊரை நோக்கி அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றார் வேல்முருகன்.

அடுத்த நொடி ரஞ்சித் வீட்டின் முன் போலீஸ் மற்றும் ஊர்க்காரர்களுடன் வேல்முருகன் நின்றார்.

தன் தந்தையை கொன்றவனை வாழ்க்கையில் இனிமேல் பார்க்கவே கூடாது என நினைத்துக் கொண்டிருந்த ரஞ்சித் தன்னவளுக்காக வேல்முருகனின் முன் வந்து நின்றான்.

ரஞ்சித்தை பார்த்ததும், "டேய் எங்கடா என் பொண்ணு,சொல்லுடா...?"என்று கோபமாக கத்த,

வேல்முருகனை கண்டதும் தன் தந்தையின் முகம் நினைவு வர கோபம் உச்சந்தலை ஏற, "உங்க பொண்ணு ஒன்னு இங்கே இல்ல. நான் உங்க முகத்தை கூட பார்க்க விரும்பல. இவரை இங்கிருந்து போகச் சொல்லுங்க..?"என்று அருகில் இருந்த கணக்குப்பிள்ளையிடம் கூறினான்.

உன் அன்பில் உன் அணைப்பில்..!Donde viven las historias. Descúbrelo ahora