நாட்கள் அழகாக சென்று கொண்டிருக்க தனிமை என்னும் வட்டத்தை தன்னை சுற்றி போட்டு கொண்டு சிறையில் இருந்த ஆராதனாவை கூட்டினை விட்டு வெளியே பறக்கும் பறவையை போல் வெளியே அழைத்து வந்தாள் தேன்மொழி.
கோவிலில் நடந்த பூஜையை முடித்து பிரகாரத்தை சுற்றி வந்தவர்கள் சிறிது நேரம் அமர்ந்தனர்.
"சொல்லு ஆரா உனக்கு என்னாச்சு..?ஏன் ஒரு மாதிரியா இருக்கே...?எதுக்கு வெளியே வர மாட்டீங்க..?உடம்பு சரியில்லைன்னு ஏன் பொய் சொன்னேன்...?"
"எனக்கு ஒன்னும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன் கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்தால தான் உன்கிட்ட என்னால எங்கையும் வர முடியாதுன்னு சொன்னேன்..."
"அப்படியா பாட்டிகிட்டே கேட்டதுக்கு நீ ரூமிலே இருந்து வெளியே எப்பையாவது வர யார்கிட்டயும் சரியா பேச மாட்டிங்கேன்னு சொன்னாங்க...?"
"இல்லை நான் நல்லா தான் இருக்கேன் பாட்டி கிட்டே பேசிகிட்டு தான் இருக்கேன்..."
"ஓ அப்படியா இதை நான் நம்பணுமா...?இன்னைக்கு நீ பண்ணுனா தப்பு எல்லாம் சொல்லட்டா...?"
"எங்க சொல்லு பார்ப்போம்...?"
"நம்ம இப்போ எந்த கோவிலை இருக்கோம் சொல்லு...?சுத்தி பார்க்கக் கூடாது...? "
அவள் திடீரெண்டு கேட்டதில் ஒரு நொடி யோசித்தவள், "அம்மன் கோவில்ல..."என்றாள்.
"நம்ம பக்கத்துக்கு ஊருல இருக்குற கிருஷ்னர் கோவில்ல இருக்கோம்...."என முறைத்தவாறு கூறினாள்.
"சாரி நான் கவனிக்கல..."
"தெரியுது நம்ம வரும் போது, நீ ஆரத்தி தட்டை தொட்டு கும்பிடும் போது,தீர்த்தம் வாங்கும் போது, நல்லாவே தெறிஞ்சது நீ கவனிக்கலைன்னு..."
ஸ்கூட்டியில் வரும் போதும் அவளிடம் பேசாததையும்,ஆரத்தி தட்டை தொட்டு கும்மிடும் போது கண்ணில் வைக்காதையும்,தீர்த்தம் வாங்கும் போது தலையில் வைத்ததையும் நினைத்தாள்.
"நீ தானே சொன்ன போன தடைவ கோவில் வரும் போது தீர்த்தம் வாங்குன தலையில வைக்க கூடாதுன்னு...?"
![](https://img.wattpad.com/cover/123464071-288-k297950.jpg)
YOU ARE READING
உன் அன்பில் உன் அணைப்பில்..!
Non-Fictionஇது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.