ஆராவின் பார்வையை தொடர்ந்து தேன்மொழியும் பார்க்க அங்கே தூரத்தில் ரஞ்சித் யாரையோ அடிக்க, அருகில் இருக்கும் ஒருவர் அவனிடம் கை எடுத்து கும்பிட்டு அடி வாங்கியவனை அழைத்து செல்ல கையை உதறியவாறு திரும்பினான்.
தூரத்தில் தேன்மொழியும்,ஆராதனாவும் தன்னை பார்ப்பதை பார்த்தவன் அவர்களை நோக்கி வந்தான் ரஞ்சித்குமார்.
தேன்மொழி தன்னை பார்த்து முறைப்பதை பார்த்து கொண்டே வந்தவன் அவர்கள் அருகில் வந்து நின்ற மறுநொடி தேன்மொழி அழுதவாறு ஓடினாள்.
தேன்மொழி ஓட ஆராவை காண அவளும் முறைத்தவாறு வாய்யையும்,மூக்கையும் மூட அதன் பிறகே தன் மேல் மதுவின் வாடை அடிப்பதை நினைத்தான்.
"நீங்க குடிச்சிருக்கீங்களா...?"
"ஐயோ..!என்ன தப்பா நினைக்காதே ஆராதனா நான் குடிக்கல..."
"எதுக்கு அப்படி போட்டு அடிச்சீங்க அவங்கள..?அங்கே என்ன நடந்தது எப்படி உங்க மேல இது கொட்டினது..."
அது வந்து என ஆரம்பித்தவன் கணக்குப்பிள்ளை அன்று தன்னிடமும் தன் தாயிடமும் பேசிய அனைத்தையும் சொன்னான்.
"ஓ நீங்க அடிச்சது தான் அவங்க பையனா...?"
"ஆமா இன்னைக்கு வரும் போது இவன் ரோட்டுல குடிச்சிட்டு விழுந்து கிடந்தான்..."என நடந்த அனைத்தையும் கூறினான்.
தன் பண்ணையை பார்க்க போய் கொண்டு இருக்கும் போது யாரோ ஒருவன் மரத்தடியில் விழுந்து கிடப்பதை கண்ட ரஞ்சித் பைக்கை நிறுத்தி அருகில் சென்று பார்த்தான்.
அவன் தன் கணக்குப்பிள்ளை மகன் சுந்தர் என்பது புரிய அவனை தட்டி உலுப்பினான்.
"டேய் சுந்தர் எழுந்திரி எதுக்குடா இப்படி பண்ணுற...? "
"எதுக்குடி என்னை ஏமாத்துன எப்படி நீ வேற ஒருத்தன கல்யாணம் பண்ணப் போற..."என போதையில் உளற,
இவனுக்கு இன்னும் போதை தெளியல போல என நினைத்த ரஞ்சித் அவனது தந்தைக்கு போன் செய்து தன் பைக்கில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து வந்து அவன் முகத்தில் தெளித்தான்.
أنت تقرأ
உன் அன்பில் உன் அணைப்பில்..!
غير روائيஇது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.