அத்தியாயம் 4

4.6K 212 44
                                    


தான் கீழ விழவில்லை என்பதை உணர்ந்து கண்களை திறந்த ஆராதனா தனக்கு மிக அருகில் தன்னை இடையை சுற்றி அணைத்தவாறு அவனது மூச்சுக்காற்று தன் மேல் படும் அளவிற்கு எதிரே நின்றவனை பார்த்தவளின் விழிகள் அவனது விழிகளை விட்டு நகராது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கோயில் மணியோசையில் தன் நிலை உணர்ந்த இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் விலகினர்.

"சாரி நான் கோபுரத்தை பார்த்துட்டே வந்ததால கீழே எண்ணெய் கொட்டி கிடக்குறத பார்க்கல. தேங்க் யூ வெரி மச் என்னை காப்பாத்துனதுக்கு..."என்று ஆராதனா நன்றி வேண்ட,

"நீ ஏன் தேங்க்ஸ் சொல்லுற...! நான் தான் அந்த கடவுளுக்கு நன்றி சொல்லலும் இப்படி ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததுக்கு..." கண்ணடித்தவாறு கூறினான் சக்திவேல்.

அவன் சொல்லுவதன் அர்த்தம் தாமதமாகவே புரிந்து கோபமாக அவனை ஏறிட அவனது புன்னகை முகத்தை பார்த்தவளுக்கு மேலும் கோபம் அதிகரித்தது.

"ஹலோ..! யார் சார் நீங்க முதல் தடவை பார்க்குற பொண்ணுகிட்ட இப்படி தான் பேசுவீங்களா.." என்று முறைப்புடன் வினவினாள்.

அது வரையில் புன்னகை முகத்துடன் இருந்த சக்திவேல் அவளது கேள்வியில் அவளுக்கு தன்னை நியாபகம் இல்லை என்பதை உணர கோபமாக அவளை ஏறிட அவனது கோபப் பார்வையில் ஒரு நெடி பயந்தாள் ஆராதனா.

முறைப்புடன் அவளை கண்டவன், "உன்னை பார்க்கணும் ஆசையா ஓடி வந்தேன் பாரு என்னை சொல்லலும் அம்மு. ஆனா உனக்கு என் நியாபகம்மே இல்லை. என்னை பார்த்து யாருன்னு கேக்குறீல அம்மு..."என்று கேட்டவாறு அவளை அக்னி பார்வையை வீசிவிட்டு கோயிலை விட்டு வெளியேறினான் .

அவனது அம்மு என்ற வார்த்தையில் தன்னை மறந்து அப்படியே நிற்க தன் தோளை தொட்டு யாரே அழைப்பது புரிய தன் நிலை உணர்ந்தாள்.

எதிரே பாட்டி இருப்பது தெரிய,"சாரி பாட்டி கோபுரத்தை பார்த்து அப்படியே நின்னுட்டேன் . லேட்டாகிடுச்சா வாங்க பாட்டி போகலாம்... " எனக் கூறியவாறு பாட்டியுடன் நடந்தாள் ஆராதனா.

உன் அன்பில் உன் அணைப்பில்..!Onde histórias criam vida. Descubra agora