"ஏலே முருகா அந்த தென்னை மட்டையை எடுத்து ஓரமா போடு வழில கிடக்கு பாரு..! ராமையா அந்த செடி எல்லாம் தண்ணி இல்லாம வாடுது பாரு தண்ணி ஊத்து. அப்பறம் பின்னாடி ரெண்டு மூணு பேரு போய் வேலையை பாருங்க..! சாயங்காலமாச்சு இன்னும் எந்த வேலையும் முடிக்காம இருக்கீங்க..." என அனைவரையும் மிரட்டி வேலை வாங்கி கொண்டிருந்தார் சிவநாதன்.
அச்சமயம் தன் வீட்டு வாயிலில் கார் நுழைவதை கண்டவர், "இந்த நேரம் யார் வராங்க...?" என யோசையுடன் இருக்க,
அவரது விழியில் காரில் இருந்து இறங்கிய தன் தோழன் வாசுதேவன் அவனது மனைவி செண்பகமும் வருவதைக் கண்டவர் தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து அவர்களை இன்முகத்துடன் வரவேற்றறார்.
"எப்படிடா இருக்கே ..?நல்லா இருக்குறையா..? இப்போ தான் என் நியாபகம் வந்ததா...?" என கூறியவாறு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் .
"நாங்க நல்லா தாண்டா இருக்கோம். நீ எப்படி இருக்கே..? இப்போ எல்லாம் உன்னை பார்க்க முடியலைன்னு அப்பா சொன்னாரு. உன்னை கேட்டதா சொல்ல சொன்னாருடா..! ஆமா பார்வதி எங்கே அவளை காணும் அம்மா எங்கேடா...?"என வாசுதேவன் வினவ,
"எல்லாரும் இருக்காங்கடா..! பார்வதி இங்க வா..!யாரு வந்துருக்காங்கன்னு பாரு..."என்று சமையல் அறை நோக்கி குரல் எழுப்பி மனைவியை அழைத்தார்.
கைகளை துடைத்தவாறு சமையல் அறையிலிருந்து,"யாரு வந்துருக்கா எதுக்கு இவரு இப்படி கத்துறாரு..." யோசனையுடன் வெளி வந்தாள் பார்வதி.
அங்கே வாசுதேவன்,செண்பகமும் இருப்பதை பார்த்தவள் சந்தோஷமாக நலம் விசாரித்தவாறே,."நீங்க மட்டுமா வந்து இருக்கீங்களா..! ஆராதனாவை இந்த தடவையும் கூட்டீட்டு வரலையா..?" பார்வதி கேட்டார்.
"நல்லா கேளும்மா..! எங்கடா என் பேத்தி..? "எனக் கேட்டவாறே கோபமாக வேக நடையுடன் அங்கே வந்தார் மரகதம் பாட்டி .
"நீங்க கேப்பீங்கன்னு தெரியும்மா..! ஆராதனா இந்த தடவை வந்துருக்கா இனிமேல் கல்யாணம் வரைக்கும் இங்க தான் இருக்கப் போற உங்களை பார்க்க நாளைக்கு வருவாம்மா..!"
![](https://img.wattpad.com/cover/123464071-288-k297950.jpg)
STAI LEGGENDO
உன் அன்பில் உன் அணைப்பில்..!
Saggisticaஇது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.