அத்தியாயம் 43

4.6K 205 154
                                    

மறுநாள் விடியல் எப்போது போல் விடிய தேன்மொழி ரஞ்சித்துக்கு உணவு பரிமாறிக் கொண்டிருக்க வாசுதேவனும்,செண்பகமும் உள்ளே நுழைந்தனர்.

"வாங்க மாமா,அத்தை..?அம்மா வாசுதேவன் மாமாவும் அத்தையும் வந்துருக்காங்க..."என்றவாறு கை கழுவப் போக,

"சாப்பிட்டு வாப்பா. நாங்க உட்கார்ந்துருக்கோம்..."என்ற வாசுதேவன் ஹாலில் தன் மனைவியுடன் அமர வாசுகி, மரகதவள்ளி பாட்டியும் வர இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தனர்.

அதன் பின் தேன்மொழியும்,ரஞ்சித்தும் வந்து இருவரிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர்.

"எப்போ வந்தீங்க சித்தப்பா..?ஆரா நீங்க வர்றதா என்கிட்டே சொல்லவே இல்ல..?"என்று தேன்மொழி கேட்க செண்பகம் அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டார்.

"மாமா போன் பண்ணி உங்க கல்யாணத்தை சொன்னாரு. அதான் உடனே கிளம்பி வந்துட்டோம்..."என்று செண்பகம் கூற,

"ஆராதனா எங்க அண்ணா இங்கே வீட்டு பக்கமே ரெண்டு நாள்ல காணும்..?"என வாசுகி கேட்டார்.

"அவளுக்கு தலைவலின்னு சொன்னா அதான் ரெஸ்ட் எடுக்கா..."என்று அவர் கூறிய அடுத்த நொடி தேன்மொழியோ சக்தியும் தன்னிடம் அதையே கூறியதை நினைத்தாள்.

ஏதோ இருவருக்கும் இடையில் சண்டை நடந்திருக்கிறது என்பதை பற்றி யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேன்மொழி.

"சரி வாசுகி என் பொண்ணையும்,மாப்பிள்ளையும் நாங்க மறுவீடு அழைச்சிட்டு போகலாம் வந்தோம். நீ என்ன சொல்லுற..?" வாசுதேவன் கேட்க,

"அதுக்கென்ன அண்ணா கூட்டிட்டு போங்க..."

தேன்மொழி சக்தியின் நினைப்பில் இருந்ததால் இவர்கள் பேசியதை கவனிக்காமல் போக அங்கிருக்கும் அனைவரும் மறுவீடு என்றதும் தேன்மொழிக்கு அவள் பிறந்த வீட்டு நியாபகம் வந்து விட்டது என எண்ணினர்.

அதன் பின் அனைவரும் பொதுவாக சிறிது நேரம் பேச தேன்மொழியும் அவர்கள் பேச்சில் கலந்து கொண்டாள்.

உன் அன்பில் உன் அணைப்பில்..!Donde viven las historias. Descúbrelo ahora