சக்திக்கு நடந்ததை பற்றி அறியாத ரஞ்சித் வேகமாக காரினை விட்டு இறங்கி வீட்டுக்குள் செல்ல வாசலிலே எதிர் கொண்டார் லட்சுமி.
"என்ன லட்சுமி அக்கா எதுக்கு போன் பண்ணி என்னை அவசரமா வரச் சொன்னேங்க...?"
"தம்பி அம்மா எதுவும் சாப்பிட மாட்டிக்காங்க. நான் எவ்வளோ சொல்லியும் ஒரு வாய் கூட சாப்பிடல..."
"ஏன் என்னாச்சு அக்கா ஏதாவது பிரச்சனையா..?அம்மாக்கு உடம்பு சரியில்லையா..?" என கேட்டவாறு வீட்டுக்குள் நுழைய,
"அது வந்து நம்ம சக்தி தம்பியை எவனோ குத்திட்டாங்க ஹாஸ்பிட்டல்ல உயிருக்கு போராடுதுப்பா..."என்று சற்று அழுகையுடன் கூறினார்.
"என்னாச்சு அக்கா யார் பண்ணுனது. நான் போனதுக்கு அப்பறம் என்ன நடந்தது..." அதிர்ச்சியுடன் கேட்க,
"யார் பண்ணுனது தெரியல தம்பி ஆனா...."தயங்கிக் கொண்டு இழுக்க,
"சொல்லுங்க. ஏன் தயங்குறீங்க...?"
"அன்னைக்கு கோவில்ல சக்தி தம்பி உங்களை கீழே தள்ளி விட்டதுனால தான் நீங்க இப்போ பலி வாங்கிட்டதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்க தம்பி. அம்மா அதுக்குத்தான் அழுதுக்கிட்டே சாப்பிடாம இருக்காங்க..." என்று தயங்கியாவாறு கூறி முடித்தார்.
"லட்சுமி அக்கா நீங்க சாப்பாடு எடுத்துட்டு வாங்க அம்மா ரூமுக்கு. நாங்க சக்தியை பார்க்க போகணும்.."என கூறியவாறு தாயின் அறைக்குள் நுழைந்தான்.
கட்டிலில் அமர்ந்து வாசுகி அழுது கொண்டிந்ததை கண்டவன், "அம்மா...! என்றவாறு தன் தாயின் அருகில் சென்று அமர்ந்தான்.
"அம்மா நான் தான் இப்படி பண்ணுனேன்னு நினைக்கிறீங்களா சக்தி என் தம்பிம்மா. அவனுக்கு எனக்கும் எந்த பகையும் இல்லம்மா. அப்பா அவங்ககிட்ட பேசாம இருந்ததுனால நானும் பேசல சின்ன வயசுல எனக்கு வாங்கின எல்லாம் அவனுக்கு வாங்கி தாங்கன்னு சொல்வேன். நான் போற இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு போய் ஒரே போல விளையாடி ஒண்ணாவே இருந்தோம்மா. சக்திக்கு அடிபட்டா கூட நான் தாங்க மாட்டேன் அப்படி இருக்குற நான் போய் எப்படிம்மா இப்படி பண்ணுவேன். நீங்களும் என்னை சந்தேகப்படுறீங்களா....? "என்றதும்,
ESTÁS LEYENDO
உன் அன்பில் உன் அணைப்பில்..!
No Ficciónஇது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.