அத்தியாயம் 24

2.8K 204 80
                                    

விடிந்ததில் இருந்து இருபது தடவை மேல் தேன்மொழிக்கு கால் பண்ணியும் ஸ்விட்ச் ஆப் என்றே வந்து கொண்டிருந்ததை கண்ட ரஞ்சித்தின் மனதில் பயம் எழுந்தது.

"ஏன் தேன்மொழி போன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது...?ஒரு வேலை சக்தி கோபத்துல அடிச்சிருப்பானா...? நேத்து வேற அவ்வளோ கோபமா இருந்தானே கடவுளே தேனுக்கு ஒன்னும் ஆக கூடாது. அவ நல்லாயிருக்கணும்..."என வேண்டிக் கொண்டான்.

படிகளில் ஏதோ யோசனையோடு இறங்கி கொண்டிருந்த மகனை கண்ட வாசுகி, "வாடா கண்ணா சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா...?"என்க,

"இல்ல எனக்கு சாப்பாடு வேண்டாம் நான் பண்ணைக்கு போறேன் கொஞ்சம் வேலை இருக்கு அப்பறம் வந்து சாப்பிடுறேன்..."

"ஏன் கண்ணா ஒரு மாதிரியா இருக்கே ஏதாவது பிரச்சனையா...?"

"ஐயோ! அப்படியெல்லாம் இல்லமா உன் மருமக பத்தி யோசிச்சேன்..."என்று தேன்மொழியின் நினைப்பில் கூற..,

"என்னடா சொல்லுற மருமகளா..."என பதறியவாறு கேட்டார்.

அவர் பதட்டத்தை கண்டு சிரித்தவன் தன் தாயை அணைத்தவாறு அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தவன்,

"சும்மா சொன்னேன்ம்மா நீங்க என்ன சொல்லுறீங்கன்னு பார்க்குறதுக்கு. ஒன்னுமில்லை நான் மில்லை பத்தி யோசிச்சிட்டு வந்தேன். சரி போயிட்டு வரேன்..."என கூறியவன் ரைஸ்மில் சென்றான்.

ரைஸ்மில் சென்று வேலை நன்றாக நடக்கிறதா இன்று என்ன வேலை செய்ய வேண்டும் மெஷின் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்று ரைஸ்மில் முழுவதும் சுற்றி பார்த்தவன் களைப்போடு தன் அறைக்கு வந்து சேரில் சாய்ந்து கண்ணை மூடினான் ரஞ்சித்குமார்.

கண்ணை மூடியதும் தேன்மொழியின் முகம் தன் நினைவில் வர அவள் எண்ணிற்கு அழைக்க சுவிட்ச் ஆப் என்றே வந்தது.

சிறிது நேரம் யோசித்தவன் மணியை பார்க்க அதுவோ மதியம் மூன்று என்பதை காட்ட ஆராவிற்கு அழைப்பதற்காக அவள் நம்பரை அழுத்த போக, "மே ஐ கம் இன் சார்..."என்ற அழைப்பில் நிமிர்ந்தான்.

உன் அன்பில் உன் அணைப்பில்..!Where stories live. Discover now