1
அந்த இனிய காலை பொழுதில் மலை அரசியின் இரவு எனும் கர்ப்பப்பையிலிருந்து "இதோ வெளியே வந்து விட்டேன்" என கூறி பகலவன் தன் கைகளை யும் கால்களையும் நீட்டி வெளியே வர மலையரிசையோ "தந்தை கூட சென்று வா மகனே" என வானத்து இளவரசனின் கையில் கொடுக்க..... இதை கண்ட மரங்களும் செடிகளும் ரசித்து நிற்க ...... பறவைகள் கூக்குரலிட ..... பகலவனோ தன் தந்தை கூட மேற்கு நோக்கி ஊர் சுற்ற பயணமானான்...... அங்கே........
கன்னியவளின் முகத்தை ஜன்னல் வழியே கண்டு தன் பொற்கதிர்களை அவள் முகத்தில் அடித்து " என்னை கண் திறந்து பாரேன் " என கூறி மெய் மறந்து நின்றான்......
கன்னியவள் என பகலவன் நினைத்தது நம்ம நாயகி தான்..... வாங்க ...நாயகியை பற்றி ஒரு introduction..... மீனாட்சி
அந்த மதுரையில் மீனாட்சி அம்மன் அழகை போல நம்ம நாயகி மீனாட்சி. கார் கூந்தல் இடை வரை நீள... பிறை போல் நெற்றி...மை இடாமலே காந்த பார்வை கண்கள்..... மருக்கள் இல்லாத முகம் ...என பார்போரை திரும்பி பார்க்க வைக்கும் அழகும் அறிவும் ஆற்றலும் கொண்டவள்.அமைதியானவள்.....அதிர்ந்து கூட பேச தெரியாதவள்... கல்லூரியில் அனைத்து போட்டிகளிலும் முதல் பரிசு வென்றாலும் கர்வம் இல்லாதவள்.கால் பாதம் கூட நிலத்தில் பட்டாலும் நிலத்திற்கே வலிக்கும் என நினைத்து மென்மையானவள்....
என்னடா இவ ஓவரர வர்ணிக்கிறாளேனு பாராக்கிறீங்களா????? அதான் நம்ம
கதாநாயகியாச்சே.....தன் மேல் விழுந்த பகலவனின் கதிர் பட்டு கண்ணை திருகியபடி சோம்பல் முறித்தாவாறு எழுந்தாள் மீனாட்சி என்ற மீனா .... தன் பெட்ஷீட் டை உதறி தள்ளிவிட்டு குளியல் அறை கு சென்று குளித்து விட்டு தலையில் ஈர டவலுடன் வெளியே வந்தவள் நேராக வாசலில் வந்து சுத்தம் செய்து கோலம் போட்டு பின் தோட்டத்துக்குள் சென்று பூக்களை பறித்து அழகாக கெட்டி சாமி படத்தில் இட்டு விளக்கேற்றி முன் நின்று கண்களை மூடி "" கடவுளே எல்லாரும் நல்லா இருக்கணும் ""என நினைக்கும் முன் கண்கள் குளமாக......
YOU ARE READING
சைக்கிள் காதல்
Romanceஇது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖