பகுதி-45

154 7 7
                                    

காதலர்கள்

காதல் படகில் ஏறி

சமுதாய கடலில் உலாவி

பிரச்சினை புயலை மீறி

திருமணம் எனும்

அழகிய தீவை

அடைய பயணிக்கும்

உல்லாச பறவைகள்...

ஆம்...

ரிஷி.. மற்றும் மீனாட்சியின்...திருமணத்தை... நடத்த...இரு குடும்பமும்.. தீர்மானித்தது..

மீனாட்சி.. கத்தி குத்து வாங்கியதும் அவளை hospitalஅனுமதித்ததும் அவள் மயக்க நிலையை அடைந்ததும்..
பார்வதி பேச போய் அவர் அங்கேயே மயங்கி விழுந்ததும்...

என... அவசர வேகத்தில் நடக்க ...

சம்பவம் அறிந்த கார்த்திக் ரிஷியின் குடும்பத்தினர் மற்றும் குமாரசாமி குடும்பமும் வந்து...சேர...

கடைசியாக.. ரிஷி மீனாட்சியிடம் பேச போய்...

தன்னவனின் குரலை கேட்டு ...கண்திறந்தாள்.. மீனாட்சி..

அதன் பிறகு மீனாட்சிக்கு செய்ய வேண்டிய ஒவ்வொரு.. வேலையையும்...தானே செய்து கொடுத்தான் ரிஷி.. ஒரு தாயை போல...

இவனின் செய்கையை..குடும்ப அங்கத்தினர் வாயாடைத்து போயினர்..

இவர்களின்.. காதலுக்கு பச்சை கொடி காட்டிய இரு குடும்பமும் திருமண பந்தத்தில் இருவரையும் இணைக்க வழி செய்தனர்...

தாங்கள் கண்ட நெடுநாள் கனவு கூடிய சீக்கிரத்தில் நடக்க போவதை அறிந்த காதலர்கள்.. வானில் பறக்க தொடங்கினர்....

சிவராமன் பார்வதி தம்பதியினர் தன் மகளுக்கு நல்ல ஒரு மாப்பிள்ளை கிடைக்க போகிறார் என்ற சந்தோஷத்திலும்...

ரிஷியின் குடும்பம் ஏற்கனவே மீனாட்சியை பற்றி தெரிந்ததால் அவள் தங்கள் வீட்டில் மகாலட்சுமியாக வருகிறாள்.என்பது  நினைத்து...ஆனந்தபட்டனர்...

சைக்கிள் காதல்Where stories live. Discover now