பெண்ணே.....
உன்னை மையமாக வைத்து
என் வாழ்க்கை இருக்க வேண்டும்
என விரும்புகிறேன்.........
என் உணர்வுகளை எரித்து
என்னை இயந்திரபடுத்துகிறாய்.......
உயிரோடு உள்ள உடலை
எரிப்பதற்கு பெயர் சதி
என்றால் ....?
இதற்கு பெயர் என்ன.....!!!??????
அனைவரும் அமைதியாக சென்ற பிறகே..... தான்... எப்படி எல்லாம் பேசினேன்.....என நினைவு வர..... உடைந்து போனான் ரிஷி......
அறைக்குள் வந்தவன்...... துக்கம் தாளாமல்......முட்டி..... போட்டு...... கட்டிலில் படுத்து.... அழுதான்......
""நான் ..... ஏன்.... அப்படி.... பேசினேன்.....எது .... என்னை... அப்படி...பேச.... வைத்தது..... மீனாட்சியின் பெயரை கேட்கவும்.... ஏன். ... என்னை....சிறுமை.... படுத்தி கொண்டேன்..... அவள் எல்லாம் கிட்டையும்......அன்பா...பேசினா.... என்கிட்டயும்.....அன்பா.... பேசவில்லை என்று ஏன் எனக்கு நிர்ப்பந்தம்..... அன்பா ... பேசுவதும்..... பேசாம இருப்பதும்... அவள் விருப்பம்.... அதற்கு என்னை... ஏன்.... வெறுக்கிறேன்...... கடவுளே.....!!!??
பாவம்.... சுதா...... எப்படிப்பட்ட பொண்ணு...... எதுக்கும் அழ மாட்டா..... ஆனால் இன்று என்னால.....கேவலம்.. ஒரு விஷயத்துக்காக......அழ வச்சிற்றேனே....... கார்த்திக்.... என் உயிர் நண்பன்..... என்ன ஒரு பிரச்சனை வந்தாலும்....காமெடியா....சமாளிப்பான்.ஆனா....இன்று....அவனையும் முகத்திலஅடிக்கிற மாதிரி பேசி அனுப்பிற்றேனே....... அப்புறம் அம்மா.......
கடவுளே..... எப்படி நான் இனி அவங்க முகத்தில முழிப்பேன்.அம்மா னா எனக்கு உயிர் னு சொன்ன நான்..... இன்று.... உங்க வேலையை பார்த்திட்டு போங்க னு சொல்ல..... எப்படி வார்த்தை வந்தது...... இதை கேட்ட அம்மா..... எப்படி மனசு உடைஞ்சு போயிருப்பாங்க..... அக்கா அறைந்தது நல்லதுக்கு தான்......""என நினைத்தவன் அவள் மேல் கோபம் வரவில்லை.....
![](https://img.wattpad.com/cover/268991465-288-k538186.jpg)
ESTÁS LEYENDO
சைக்கிள் காதல்
Romanceஇது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖