பகுதி- 8

88 5 1
                                    

One side love

வெறுத்து போவரை
விரட்டி பிடிப்பது தவறு
என்று அறிவுக்கு தெரிந்திருந்தாலும்
இதயத்திற்கு தெரிவதில்லை.......

மழையில் நனைந்தபடி வீட்டிற்கு வந்தான் ரிஷி... அவனைக் கண்ட லெட்சுமி.....""ஏன்டா.... இப்படி... மழையில....நனைஞ்சிற்று வர...... கொஞ்சம் நேரம் ஒதுங்கி நிற்க கூடாதா.....""என கேட்க....

அவனோ.... ஒன்றுமே....சொல்லாமல்.... அவன் அறைக்கு சென்று கதவை பூட்டினான்......

""    ம்ம்....பேயறைஞ்ச மாதிரி போறான்.......இவனுக்கு.... என்னாச்சு.... நல்லா தானே...இருந்தான்....."" என நினனக்க....""மழையில நனைஞ்சிற்று வந்ததினாலயா....இருக்கும்.....என நினைத்தார்.....

மழையில் நனைந்து வந்ததனால் முடியிலிருந்து சொட்ட சொட்ட விழுந்த மழைத்துளியை....விட அவன் கண்களிலிருந்து வந்த கண்ணீர் துளியை....அதிகமாக கீழே சிந்த....

கட்டிலில் வந்து அமர்ந்தான்.. ரிஷி எவ்வளவு நேரம் அப்படி இருந்தானோ.... தெரியவில்லை.... அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும்...நெஞ்சை....அம்பு கொண்டு துளைத்தது போல் இருந்தது.......

""என்ன ..... சொன்னா..... நான் அறிவில்லாதவனா....?பொண்ணுங்க.. பின்னாடி சுற்றி அவங்க நிம்மதியை கெடுக்கிற..... பொம்பள பொறுக்கிய......கடைசில....கடைசில.....எ..... என்ன....
சொன்னா.... பொண்ணுங்களோட.... உணர்வுகளை புரிஞ்சுக்கமா.....அவங்க.....அவங்க......உடம்.......சொல்லவே.....நாக்கு..... கூசுது...... நான்..... என்ன..... அவ்வளவு..... கேவலமானவனா......""என நினைக்க நினைக்க.... நெஞ்சு விம்மி...... தலையணையில்.  முகம் புதைத்து.....
ஓஓஓஓஓ ......வென அழுதான்......

ஆண்கள் அழ கூடாது..... என்று சமூகம் சொன்னாலும்......ஆண்களுக்கும்...... வலி இல்லையா....? இல்ல  வேதனை தான். இல்லை யா.....!!!

""அறைக்குள் போனவனை.... இன்னும் காணவில்லையே....""என லெட்சுமி நினைக்க..... ரிஷியின்அறையின் கதவை தட்டினார்....

சைக்கிள் காதல்Where stories live. Discover now