அந்த அழகிய காலை பொழுதில் ரிஷி கதிரவனின் ஒளியில் விழித்தேழ.... சோம்பல் முறித்தாவாறு எழுந்து உட்கார்ந்தான்.. மணி ஏழு.... என்று அடிக்க..."""" ஐயோ ஐயோ...நேரமாச்சே...""என நினைத்து குளியலறைக்குள் சென்று காலை கடன்களை முடித்துவிட்டு வெளியே வர
""அம்மா.....காப்பி பி பி...."" எனக் கூக்குரலிட ...
""ஐயோ...கத்தாதேடா..... காது அடைக்குது...இவ்வளவு அவசரமா எங்கடா போற...என லெட்சுமி கேட்க
"" அது.... அது..."" என யோசித்தவன்....
"" ஆ..ஆ.... கடைக்கு போக வேண்டாமா..."" என சமாளிக்க....
"" கடைக்கா...ஏது கடைக்கு....இண்ணைக்கு ஒரு கடைக்கும் போக வேண்டாமே..."" என கூற
ரிஷிக்கோ ஏமாற்றமாய் இருந்தது.. எப்படியாவது நேற்று போன நேரம் கடைக்கு சென்றால் தன்னவளை காணலாம்... என்று எண்ணிய வன் அம்மா இப்படி சொன்னதும் என்ன செய்வது என்று பதறி நிற்க.......
""டேய் தடியா.... எங்கடா ... இருக்க... எவ்வளவு நேரமா உன்ன கூப்பிடுறது... வெளியே வாடா.....என கத்தி கொண்டிருந்தாள் சுதா
சுதா ரிஷி யின் அத்தை பொண்ணு..செம வாயாடி..... யார் கிட்டையும் அடங்காதவள்.....
""இவ.. எதுக்கு.. இப்போ.. வந்திருக்க..." என லெட்சுமி நினைக்க....
வேகமாக வீட்டுக்குள் வந்தவள் ரிஷி யை பார்த்து "" மாம்ஸ் எனக்கு ஒரு help வேணும்...
"" யோ....இவ வேற.... நேரம் காலம் தெரியாம....""என ரிஷி நினைக்க...
""ஆங்ங்.... அம்மா .. காலையில சாப்பிட தந்த தோசை எனக்கு பிடிக்கலை... எனக்கு அண்ணாச்சி கடையில இருந்து பரோட்டா வாங்கி தறியா....""என கேட்க...
""அடி...ஆத்தி..... உனக்கு கொழுப்பு கொஞ்சம் அதிகமாச்சுடி... இப்படி மதினி சமைச்சு தந்ததே பிடிக்கலேனா...அடுத்த வீட்டுக்கு போயி...எப்படிடி ..வாழ போற ...""என
லெட்சுமி கரித்து கொட்ட....அதை எல்லாம் காதில வாங்காதவள் "" plzzz ரிஷி வாங்கி தாடா....அப்பா வந்ததும் காசு வாங்கி தாரேன்.... இப்பவே ரெம்ப பசி..... இன்னும் 5 நிமிஷம் லேட்டானா மயங்கி யே போவேன்டா..."" என பொய்யா மயங்கி போறது போல் நடிக்க.....

YOU ARE READING
சைக்கிள் காதல்
Romanceஇது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖