பகுதி_5

115 7 0
                                    

அங்கே.....மீனா உறங்காமல் புரண்டு கொண்டிருந்தாள்.....

""யாரிவன்.....என்னை பின் தொடருகிறானா....?? .. சே..சே.. அப்படி ஒன்றும் இருக்காது....2,3 தடவை சைக்கிளில் பார்த்ததா ஞாபகம்....சில நேரங்களில் மாலையிலும் கூட... ஆனால் தான் நடந்து வரும்போது... பக்கத்திலேயே...நடந்து வருகிற மாதிரி இருக்காது..... தூரத்தில் நடந்து தான் வருகிறான்....சோ அப்படி இருக்க வாய்ப்பில்லை....."" என நினைக்க

"" இருந்தாலும்.... அப்புறம் ஏன் ... மத்தியானம் பார்க்கும் போது உரப்பையை வைத்திருந்தவன் .... ஊருக்கு போக பஸ் வந்தாலும்... போகாமல்... மாலை வரை அங்கேயே...நின்றிருந்தது ....ஏன்...? என்னை கண்டதும் அவன் முகத்தில் புன்னகை பூத்தது ஏன்...? தான் திரும்பி பார்க்கும் போது.... அவன் என்னையே .. பார்த்து கொண்டிருந்தது ஏன்....??? "" என ஆயிரம் கேள்விகள் மனதில் முளைக்க.... தலை வலி மண்டைய பிளந்தது...

""ம்ம்... நாளை முதல் இப்படி கவனக்குறைவா‌ இருக்காதே...மீனா ... அப்புறம் பிரச்சினை உனக்கு தான்...."" என தன்னை தானே சொல்லி கொண்டவள்....நாளை முதல் கவனிக்க தொடங்கலாம் என மனதை சமாதான படுத்தி.... அந்த நிலவின் குளிர்ச்சியில் ....உறங்கியும்... போனாள்....

மறுநாள் காலை யில் .... என்றைக்கும் போல் நடந்து வர..... தூரத்தில் இருந்தே...அவனை கவனிக்க தொடங்கினாள்.....

"" அப்பாடா.... அவன இன்று காணல... நான் தான் லூசு மாதிரி... என்னல்லாமோ...... நினைச்சிற்றேன்.."" என நிம்மதி பெருமூச்சு விட்டு ... நடந்து.. வளைவை எட்ட....

எங்கிருந்தோ அடித்து புரண்டு வந்தவன்...போல் சைக்கிளில் வேகமாக வந்து... அவள் முன்னே..நிறுத்த....

ஒரு நிமிஷம் ஆடி போய் விட்டாள் மீனா....

வேர்க்க..விறுவிறுக்க.. முடி எல்லாம் கலைந்து... வியர்வை சொட்ட சொட்ட சிந்த...ஏதோ..சைக்கிள் பந்தயத்தில் ஓடி வருபவன் போலவந்தவன்... தன்னவளை... கண்டவன்.... நிம்மதி பெருமூச்சு விட்டான்...

மீனா... சட்டென தலையை திருப்பி.. வேகமாக நடக்க... அருகில் சைக்கிளை கொண்டு வந்தவன்... என்றைக்கும் போல் பெல்லை அடிக்க... அவள் திரும்பவே செய்யாமல் வேகமாக நடந்தாள்.

சைக்கிள் காதல்Onde histórias criam vida. Descubra agora