பகுதி..2

155 7 1
                                    

பஸ்ஸில் தேவதை  ஏறி சென்றதும் ... தன்னை விட்டு நெடுந்தூரம் சென்றது போல் உணர்ந்தான் ரிஷி....

அனைத்து சாதனங்களையும் வாங்கியவன் வீட்டை நோக்கி புறப்பட... வீட்டிலிருந்து வரும் போது உள்ள சந்தோஷம் இப்போது காணாமல் போனதே.....

வீட்டில் நுழைந்ததும் ""ஏன்பா முகம் இப்படி ஒருமாதிரி இருக்கு""" என லெட்சுமி கேட்க

""இல்லமா..... லைட்டா தலை வலிக்குது """ என கூற

""வெயில்ல போனேன்லா அதான்... ஒரு காபி எடுத்திற்று வரட்டுமாடா""'எனக் கேட்க...

""இல்லமா.... இப்போ வேண்டாம்..."" என கூறி தன் அறைக்கு சென்றான்...

கதவை பூட்டி கட்டிலில் போய் படுத்தவன் கண்களை இறுக்க மூடிக் கொண்டான்.அந்த மஞ்சள் நிற தேவதையின் முகம் கண்ணில் மின்னல் வெட்டியது போல் வந்து சென்றது.....

தடாலன எழுந்து உட்கார்ந்தான் ரிஷி...

""எனக்கு என்னாயிற்று...யாரிவள்... இதற்கு முன்  இவளை.நான் பார்த்ததே இல்லையே.... ஒரு தடவை பார்த்த உடனே இப்படி மீண்டும் மீண்டும் அம்முகத்தை பார்க்க வேண்டும் என்று ஏன் தோன்றுகிறது.... கல்லூரியில் படிக்கும் காலத்திலும் சரி... இப்போ வேலை செய்யும் இடத்தில் சரி... எத்தனை பெண்களை பார்த்திருக்கிறேன்.... எத்தனை பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தும் போது அதை எளிதாக நிராகரித்த நான் இன்று என்றுமில்லாத   ஏன் தடுமாறுகிறைன்‌....

காரணமே இல்லாமல் மனதில் இதம் பருவுவது போல் உணர்ந்தான் ரிஷி.. இது எதனால் என யோசிக்க ...... அவன் மனசாட்சியோ...""அட... மடையா... இதற்கு பெயர் தான் காதல்.... மவனே.. எத்தனை பெண்களை வேண்டாம்னு சொல்லியிருப்ப.. இப்போ .. நீயும் .. அனுபவி....""" என உரைத்து கூற..

தன்னாலே முகம் 1000 வால்ட் பல்ப் போல் பளிச்சிட்டது.....

டொக் டொக் டொக்....

என கதவு தட்டும் சத்தம் கேட்டவன் கதவை திறக்க.. அங்கே ரித்து நின்று கொண்டிருந்தாள்...

""என்னாச்சு... உடம்பு ஏதும் சரியில்லை யா... தலை வலிக்குது னு அம்மா கிட்ட சொன்னியாமே... எனக் கையை நெற்றியில் வைத்து பார்த்தவள் காய்ச்சல் ஒண்ணுமில்லையே ...?என பதற
அவன் முகத்தை பார்த்தவள் அவன் முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டவள்

சைக்கிள் காதல்Opowieści tętniące życiem. Odkryj je teraz