பாகம் -1
மனங்களின் போராட்டம்பகுதி 1..
கருமை சூழ்ந்த இருட்டு வேளை .படையெடுத்து உள்ள அந்த இருட்டில் நான் எதற்கும் பயப்பட மாட்டேன் என்ற தைரியத்துடன் ஒரு பெண் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தாள்.
குள்ளமாய் இருந்த அவள் தன் நீண்ட பின்னிய முடியை முன் போட்டுக் கொண்டு வெள்ளை நிற தனது துப்பட்டாவின் நுனியை கையில் பிடித்து கொண்டு அந்த இருட்டைப் பார்த்து பயப்படாமல் நின்று கொண்டிருந்தாள். பின் வேப்பத்தூர் (கற்பனை ஊர்)என்னும் சிறிய கிராமத்தில் இருந்து சென்னையில் கிடைத்த வேளைக்கு வர தனது பெற்றோரை மிகவும் போராடி சமாளித்து வந்து முன்பின் பழக்கமில்லாத இவ்விடத்தில் வேலை செய்கிறாள் என்றால் அவளின் மனதைரியத்தை அறியலாம்.
இங்கு அவள் வந்து வேலை செய்வதற்கு ஒரே காரணம் அவளின் திருமணம் பற்றிய பேச்சுகளை தள்ளி போடவே.
இருவருடங்கள் தான் வேலை பார்க்க உள்ளதாகவும் அதுவரை திருமணம் பற்றி பேச வேண்டாம் என்று அவள் அழுத்தமாக கூறியுள்ளதால் அவளின் பெற்றோரும் அவளை தொந்தரவு செய்யாமல் வேலைக்கு அனுப்பியுள்ளனர்.
அவளின் தாய் பல்லவிக்கு முதலில் சம்மதம் இல்லை ஏனென்றால் அவ்வளவு தூரத்திற்கு தன் மகளை எப்படி தனியாக அனுப்புவது.
"காலம் கெட்டு போயிருக்கு சனா.அங்க எப்படி தனியா இருப்ப!" என்று பல்லவி புலம்ப
"அம்மா.நான் அங்க ஹாஸ்டல்லாம் பார்த்துட்டம்மா...அது சேப்பான பிளேஸ் தான் நீ பயப்படாத.."
"எனக்கென்னவோ .."என்று அவர் வேலைக்கு செல்ல தடைப்போடுவதற்கு முன் முந்திக்கொண்ட சனா
"அம்மா!ஒரு நாலஞ்சு மாசம் தாம்மா தனியா இருப்ப... அதற்குள்ள கிறிஸ்ட்டலுக்கும் ஜாப் கிடைச்சடும் அவளும் வந்திடுவாமா...சோ நீ பயப்படாத"
என்று தைரியம் சொல்ல பல்லவியும் சரி என்று தலையசைத்தார். தன் மகளின் தைரியமான பேச்சாலும் கிறிஸ்டிலாவும் அவளுடன் தங்கப் போவதாக கூறியதால் மட்டுமே அவர் அதற்கு ஒப்புக் கொண்டார்.கிறிஸ்டிலாவும் சனாவும் சிறு வயதிலிருந்தே உயிர் தோழிகள். கிறிஸ்டிலாவைப் பற்றி பல்லவிக்கு நன்றாக தெரியும். தன் மகளை விட கிறிஸ்டிலா மிகவும் பொறுப்பானவள் சனாவை அவள் நன்றாகப் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை ஒருபக்கம் இருந்ததால்தான் அவர் சனாவை வேலைக்கு அனுப்ப முழுமையாக ஒத்துக் கொண்டார்.
YOU ARE READING
ஆயிரங்காலத்துப் பயிர்
Romanceஇரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...