41
தேவின் கூற்றை எல்லாம் கேட்டதும் கயல் மனம் அவளிடம்" இந்த அனிருத் நல்லவன் தான். ஆனா கோபக்காரன் .கோபக்காரன்தான் ஆனா கொலையும் பண்ணுவான்." என்று எதை எதையோ எண்ண பிறகு அவள் மனதிடம்
" நமக்கு எதுக்கு இதெல்லாம்?" என்று அவளை கட்டுப்படுத்தினாள்.தேவ் அனிருத்தை போலீஸ் காவலில் எடுக்க போகும் பொழுதே கேசை வாபஸ் வாங்கினான்.
"நான் உன்னை என் தம்பியாதான் நினைக்கும் அனிருத் இந்த மாதிரி தப்பான காரியத்தை எல்லாம் விட்டு விடு "என்று சொல்ல அதனை அனிருத் கேட்காமல்
" இந்த தடவை நீ தப்பிச்சுட்ட..
பட் அடுத்த தடவை உன்னை எப்படி கொல்லுற பாரு "என்று சொல்லி சிரித்தான். அவனைத் திருத்த முடியாது என்று தேவுக்கு தோன்றியதால் அவன் அமைதியாக வெளியேறினான்.சனா கிறிஸ்டினாவின் குடும்பத்தினரும் ஊருக்கு புறப்பட தயாராக பொழுது கயல் அனைவரிடமும்
" நானும் இங்க ஒரு ஆபீஸ்ல அப்ளை பண்ணியிருக்கேன். அந்த வேலை கிடைச்சதும் நானும் அக்காக்கூடவே தங்கிடுவேன்" என்று சொல்ல கயல் பிடிவாதக்காரி என்பதால் யாரும் அதனை மறுக்கவில்லை. பிறகு அனைவரும் ஊருக்கு புறப்பட்டனர். இவ்வளவு நேரம் கலகலப்பாக இருந்த வீடு இப்போது வெறிச்சோடிப் போனது.சனாவின் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க கயல் மற்றொரு புறத்தில் சென்னையில் வேலை தேடுவதற்காக சென்னைக்கு வந்து ஒரு கம்பெனி இன்டர்வியூவுக்காக அலுவலகத்தில் காத்துக் கொண்டிருக்கும் போது ஒரு அறை கதவை திறந்து பி.ஏ உள்ளே நுழைந்தார்.
அவன் நுழைவதனை எதிர்பார்க்காத அனிருத் யாரென்று திரும்பிப் பார்க்க பி.ஏ நுழைவதை கண்டதும் முகத்தினை" இவனா?" என்று திரும்பிப் பார்த்து திரும்ப பார்வை கயலின் மீது பட்டதும் அவன் முகம் கோபத்தில் சிவந்தது.
" அவ எதுக்கு வந்திருக்கா?"என்று பி.ஏவை கேட்க "இன்டர்வியுக்கு வந்திருக்காங்க ஸர்"என்று உள்ளே வந்தவன் அனிருத்தின் எதிரே அமர்ந்திருந்தவனிடம் ஒரு பைலினை கொடுத்துவிட்டு வெளியே சென்றான்.
YOU ARE READING
ஆயிரங்காலத்துப் பயிர்
Romanceஇரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...