42 பாகம் -3
மனங்களின் மாறுதல்!பிடிக்காதவன் கையால் தாலியை வாங்கினாலும் சனா மகிழ்ச்சியில் இருப்பதாய் நடித்தாள்.
அவளின் மகிழ்ச்சியில்லாத உள்ளத்தை பற்றி அறிந்த மூவரும் கவலைப்பட்டனர். திருமணம் முடிந்த பிறகு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குன இருவரும் எழுந்தனர்.
இருவரும் சனாவின் சாணக்கியர்-பல்லவி காலில் விழுந்து எழுந்ததும் சனா அபியை முகம் பார்த்து ஏளனமாக சிரித்தாள்.
அதற்கான பொருளை அறிந்த அபியால் மௌனமாய் மட்டுமே இருக்க முடிந்தது.சடங்குகளுக்கு பிறகு அனைவரும் மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு சென்றனர் .அபிராமி ஆரத்தி எடுத்து மணமக்களை வரவேற்க பவி தன் அண்ணனிடம்
"அண்ணி வந்துட்டாங்குனு இந்த தங்கச்சிய மறக்க மாட்டியே அண்ணா?" என்று கேட்க அவனும் இல்லை என்று தலையை சிலுப்பினான்.மாலை நேரம் வந்ததும் சனா அபி மற்றும் அவர்களுடைய பெற்றோர் மட்டும் அங்கு இருக்க மற்ற அனைவரும் கிறிஸ்டிலா தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றனர்.
ஆண்கள் தேவ் வீட்டில் தங்கி கொள்ள பெண்கள் கிறிஸ்டிலாவின் வீட்டில் தங்கிக் கொண்டனர்.
இரவு....
அபியின் அறைக்குள்ளே அமைதியாய் நுழைந்த சனா கதவை தாளிட்டு அமைதியாக விரிப்பினை கீழே விரித்து படுத்தாள் .பொறுமை இழந்த அபி அவளிடம் பேச முற்படும்போது சனா கோபமாய் எழூந்து
" என்கிட்ட ஏதாவது பேசின அவ்வளவுதான்" என்று கண்டிக்க அபி மனம் கலங்கி
" நான் சொல்றதை கேளு சனா குட்டி ..நான் பண்ணது தப்புதான்... நான் இனி அப்படி பேசமாட்டேன் நினைக்க மாட்டேன்.."
என்று மனமுருகி கீழே சனாவின் அருகில் அமர்ந்தான். அவன் பேசுவது உண்மை அவன் தவறை உணர்ந்து விட்டான் என்பது சனாவிற்கு புரிந்தாலும் அவள் மனம் ஏனோ அவனை மன்னிக்க மறுத்து .அதனால் சனா கோபத்துடன்
" உன்னை மன்னிக்கிறேன் மனசு என்கிட்ட இல்ல நான் நிம்மதியாக இருக்கனும்னு நீ நெனச்சா தயவுசெய்து போய் அமைதியாக படு என்கிட்ட எதுவும் பேசாதே" என்று போர்வையை இழுத்து மூடிக் கொண்டு படித்தாள்.
அபி மனம் ஆறும் வரை கண்ணீர் விட அந்த கண்ணீர் அவன் மனதை கடைசி வரைக்கும் ஆற்றவில்லை அதனால் அந்த இரவு அவனுக்கு அன்றிரவு தூங்கா இரவாகவே கழிந்தது.
YOU ARE READING
ஆயிரங்காலத்துப் பயிர்
Romanceஇரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...