16

76 4 0
                                    

மெல்லிய புன்னகையை அவனிடம் கொடுத்த கிறிஸ்டிலா ஒரு ஆட்டோவினை பிடித்து தேவை தன்னுடன் தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்‌.
பிரியங்காவிடம் தேவ் தன்னுடைய முதலாளி என்றும் ஒரு பிரச்சனையால் அவர் இந்த நிலையில் உள்ளார் என்றும் அவர் இங்கு தங்க வைப்பது எந்த வித பிரச்சனையும் ஏற்படாது என்றும் தெரிவித்தாள்.
பெண்கள் தனியாக தங்கி இருக்கும் வீடு  தனக்கும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். எவ்வாறு ஒரு ஆண்மகனை தங்க வைப்பது என்று தயங்கிய பிரியங்காவிடம் கிறிஸ்டிலா
" அக்கா  அவரு மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு.  அவரு ரொம்ப நல்லவரு. நீங்க அவர நம்பலாம்!" என்று அவள் உறுதியாக சொன்னதும் தயங்காமல் பிரியங்கா ஏற்றுக்கொண்டாள்.
" மற்றதை பற்றி எல்லாம் நாளைக்கு பேசிக்கலாம்க்கா! ஏன்னா அவரு கஷ்டத்துல வந்திருக்காரு! கவலையா இருக்காரு அதனால நாளைக்கு பார்த்துக்கலாம்!"
"அதுல என்னம்மா நாளைக்கு பார்த்துக்கலாம். நீ அவர அந்த வீட்டில தங்க சொல்லு!" என்று சொன்னதும் கிறிஸ்டிலா கீழே நின்று கொண்டிருந்த தேவினை அழைத்துக்கொண்டு பின்புறத்தில் இருந்த சிறிய வீட்டை திறந்து உள்ளே அழைத்துச் சென்றாள்.

வீடு சுத்தமாக இருந்தது. லைட் மட்டும் பேனும் இருந்தது. ஒருவர் தங்குவதற்கு ஏற்ற வீடு என்றாலும் அது தேவிற்க்கு சிறியதாகவே தெரிந்தது .ஆனாலும் யாரும் அவனுக்கு உதவாத சமயத்தில்  கிறிஸ்டிலாவின் இந்த உதவி அவனுக்கு பெரிய  உதவியாகவே தெரிந்ததால் அவனும் அந்த வீட்டை மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொண்டான் .

"நீங்க இங்க இருங்க  சார்.நான் உங்களுக்கு டின்னர் செய்து எடுத்துட்டு வரேன்!" என்று அவள் சொன்னதும் அவளிடம்
"என்ன சார்னு  கூப்பிடாத கிறிஸ்டிலா! இப்ப நான் உனக்கு எம்.டி இல்ல .நீ என்ன அப்படி கூப்பிடும் போது எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வருது. சோ" என்று அவன் சொல்லி முடிக்கவில்லை அதற்க்குள் கிறிஸ்டிலா முந்திக்கொண்டு
" அப்போ  உங்கள தேவுனு கூப்பிடவா?"  என்று ஆர்வமாய் கேட்க
"தேவா? சரி கூப்பிடு .என்னை பெயர் சொல்லி கூப்பிடுறது உனக்கு  ரொம்ப நாள் ஆசை போல?" என்று அவன் குறும்பாக கேட்க
" முதலாளிய பெயர் சொல்லிக் கூப்பிடுறத்துனா  சும்மாவா ?அதுலாம் செய்  ஜாலி !பட் பட்டப்பெயர்ல  கூப்பிடுறதுதான்  ஜாலியா இருக்கும் !"என்று அவள் வாயை விட
" பட்டப்பெயரா?என்ன அது!" என்று அவன்  புருவத்தை உயர்த்திக் கேட்க
"ஐயோ!உலறிட்டோமே!"என்று நாக்கினைக் கொண்டு
" நான் டின்னர் எடுத்துட்டு வரேன் தேவ்!" என்று அங்கிருந்து ஓடினாள்.



அவள் ஓடுவதை பார்த்து அவ்வளவு நேரம் இறுக்கமாக இருந்த மனம் சற்று லேசாக அவன் இதழில் புன்னகையை கொடுத்தது.

ஆயிரங்காலத்துப் பயிர்Onde histórias criam vida. Descubra agora