3

136 4 0
                                    

சனா அலுவலகத்தில் விடுப்பு தெரிவித்துவிட்டு தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்தாள்.
இரண்டு மாதங்கள்  கழித்து பார்த்த தன் தாயை அணைத்துக் கொண்டவளை தன் தாயின் கரங்கள் தலைமுடியில் தேய்த்து சாந்தமாக்கின.
" அங்க தனியா எப்படிமா இருந்த? குழந்தை இளச்சு போயிட்டு இருக்கு" என்று அவளின் கரம் பற்றிய பல்லவியை
"அம்மா நான் ஒரு சுத்து ஏறிதான்   போயிருக்க ! சாப்பிடறத்து வேலைக்கு போவது தவிர எனக்கு என்ன வேலை? இங்க இருந்தாவது நான் வீட்டு வேலை தொழுவம் வேலை   பண்ணுவ. ஆனா அங்க தான் அந்த வேலையெல்லாம் இல்லையே!" என்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது சாணக்கியர் அங்கு வந்து சனாவிடம்
"எப்படிமா இருக்க ? குழந்தைய உள்ளே கூட்டிட்டு வந்து பேசுடி !"என்று சாணக்கியர் சொன்னதும் உள்ளே வந்த சனா சாணக்கியரை கட்டித்தழுவி
"நான் நல்லா இருக்கேன் பா ! என்ன நான் போனதுக்கு அப்புறம் அம்மா உங்களுக்கு ஒழுங்கா சாப்பாடு போடுறத்து இல்லையா? தொப்பை குறைச்சிருக்கு!" என்று சனா சாணக்கியரின் வயிற்றில் கை வைத்து நகைத்தாள்.

"சொல்லுவடி  நீ .அதான் உன் கூட பிறந்தவ இருக்காலே! நான் சாப்பாடு போடாம விட்டா அவ என்ன விட்டுறுவாலா?"  என்றதும் சாணக்கியனும் சனாவும் விழுந்து விழுந்து சிரித்தனர் .
"என் கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா இருக்கா? அவ எனக்கு மாமியார் இல்லாத குறையை தீர்த்து வைக்கிறா?"என்று பல்லவி சிரித்துக்கொண்டு சொல்ல
"எங்கம்மா உன் மாமியார்?" என்று கேட்டால் சனா.

"அவ தீப்ககூட  எம்.எஸ்சி காலேஜ் அப்ளிகேஷன் வாங்க போயிருக்கா."
" தீபக் அண்ணா வந்திருக்கானா ?"என்று ஆச்சரியமாய் சனா கேட்க
" அவனும் தான அருணுக்கு  மாமா .மாமன் சிறு தமிழ் பொண்ணுக்கு  அவனும் பண்ணனும். அதனாலதான் நேத்து ராத்திரி வந்தான்."
" அப்ப ஜாலி தான் .நான் தீபக்னா கயல்  எல்லாம் ஒரே அரட்டை அடிக்க போறோம் !பாருங்கள்!" என்றுதான் செய்ய வேண்டிய அரட்டைகளை பற்றி எண்ணி அதில் மூழ்கினாள் சனா.

ஆயிரங்காலத்துப் பயிர்Where stories live. Discover now