38

57 3 0
                                    

38
கிறிஸ்டிலா இரவு வீட்டுக்குச் செல்வதற்கு ஏதுவாக தேவ் காலை முழுவதும் வீட்டில் இருந்து தள்ளி உள்ள பிரான்சிலும் மாலையிலிருந்து இரவு வரை வீட்டு பக்கத்துல பிரான்சிலும் வேலை செய்வது ஒரு மூன்று மாதங்களாக அவனிடம் வழக்கமாக உள்ளது .
அன்று மழையின் காரணமாக அனைவரும் சீக்கிரம் வீட்டிற்கு சென்றுவிட கிறிஸ்டிலாவும் தேவும் நேரம் போவது தெரியாமல் வேலை செய்து கொண்டிருந்தனர். வேலை முடிந்ததும் இருவரும் வெளியே வர மழை தன் வேலையை செய்து கொண்டிருந்தது. தேவ் கிறிஸ்டிலாவிடம் "மழை பெய்து எப்படி போகப் போற?"
" நின்னாதான்‌.." என்று அவள் விரக்தியுடன் சொல்ல
"நின்னா தானா...கிறிஸ்டிலா எனக்கு வேற கொல்ல பசி... சீக்கிரம் வீட்டுக்கு போய் எதாவது செஞ்சு வை" என்று கேட்க
" நானாங்க  வீட்டுக்கு போகமாட்டேன் சொல்ற..மழையும் சதி பண்ணுது.."
"இதுதான் பிரச்சனையா? நான் கூட்டிட்டுப் போறேன் வா..." என்று அவளின் கையை பிடித்து அழைத்துச்  சென்றான் .இருவரும் காரில் ஏறினர்.
தேவ் காரை  ஸ்டார்ட்  செய்ய அது ஸ்டார்ட் ஆகவில்லை. அவனும் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தான் ஸ்டார்ட் ஆகவில்லை. பல்லைக்காட்டி
" ஏதோ ப்ராப்ளம் நினைக்கிறேன்" என்று அவள் சொல்ல
" இந்த காரும் மழைக்கூட கூட்டு சதி பண்ணுது...இப்ப என்ன பண்றது?" என்று விரக்தியில் கிறிஸ்டல் சொல்ல தேவோ பசி அவனை வாட்டியதால் காரின் ஸ்டீயரிங் மீது சாய்ந்தான்.
ரொம்ப நேரமாகியும் மழை  நிற்காததால் கிறிஸ்டல்
" இவ்வளவு பெரிய கார்மென்ட்ஸ் வெச்சிருக்கிங்களே?எவ்வளவு துணி தெச்சிருப்பீங்க?ஒரு குடை வெச்சிருக்க  மாட்டீங்களா ?"என்று நெற்றியில் கைவைத்து கேட்க
" நான் இப்படி நடக்கும்னு  என்ன மார்னிங் கனவு கண்டா வந்த?ஆமா இந்த கார்மென்ட்ல பி.ஏவா வர்க் பண்ணுறீங்களே உங்க கிட்ட ஒரு குடை இல்லையா மிஸ் கிறிஸ்டிலா?" என்று அவன் கேட்க "சரி விடுங்க தேவ்.. மழை விடற மாதிரி இல்ல ரெண்டு தெரு தள்ளிதான வீடு இருக்கு நான் நடந்தே போகிறேன். நீங்க மழை விட்டதும் வாங்க "என்று அவள் கீழே இறங்கி செல்ல
" மழையா இருக்கு!" என்று அவன் அவளின் கையை பிடித்து தடுக்க
"தேவ் உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நான் ஒரு அத்லெட்!" என்று அவள் குனிந்து ரகசியம் சொல்வதுபோல சொல்லி
" இங்க  இருந்து வீட்டுக்கு ஓடினா ரெண்டு நிமிஷத்துல போயிடுவன் நான் அங்க போய் உங்களுக்கு  டின்னர்  செஞ்சு வைக்கிறேன்.
நீங்க பொறுமையா வாங்க!" என்று கூறிவிட்டு ஓடினாள்.

ஆயிரங்காலத்துப் பயிர்Where stories live. Discover now