45
பொன்னிற மாலைப்பொழுது .கயல் கூட்டமில்லாத அந்த ஹோட்டலில் தன் முன்னிருந்த தண்ணீரை எடுத்துக்குடித்து "எப்ப வர சொன்ன எல்லாரையும்? இன்னும் வரவில்லை" என்று கோபத்தோடு இருக்க அபி தலையில் கட்டுடன் உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்ததும்" மாமா உங்களுக்கு இப்ப பரவாயில்லையா?" என்று அவனை நலம் விசாரிக்க" பரவாயில்லை கயல்" என்று அவன் அவள் எதிரில் இருந்த சீட்டில் அமர
" அக்கா எங்கே?" என்று கேட்கும் பொழுது சனா தனியாக ஒரு ஆட்டோவில் இருந்து இறங்கி உள்ளே வந்து அவளருகில் அமர்ந்தாள்.கயல் திரும்பிப் பார்க்கும் பொழுது தேவ் கிறிஸ்டிலா ஆர்.எல் என மூவரும் உள்ளே நுழைந்தனர்.
அவர்களும் அமர கயல்
"கெட்டு கெதர் மாதிரி உங்க எல்லாரையும் வரச்சொன்னா ஆளுக்கு ஒரு டைமிங்கில வரீங்க?" என்று கோபப்பட சனா
" வெர்கிருந்தது கயல் அதான் லேட் ஆகிடுச்சு" என்று சொல்ல
" நீ கல்யாணம் பண்ணிட்டு போனதுக்கப்புறம் எங்ககிட்ட எங்கக்கா ஒழுங்கா பேசுற?" என்று கயல் புலம்ப ஆர்.எல்லும் அவளுடன் கைக்கோர்த்துக்கொண்டு
"ஆமா கயல் அவ எல்லாரையும் மறந்துட்டா" என்று ஆதங்கத்தை தெரிவிக்க கிறிஸ்டினா தான் இருவரையும் அமைதியாக்கி அபியிடம்
" இப்ப வலி எப்படி இருக்குனா?"
" பரவாயில்லை கிறிஸ்டல்"என்று அவன் சொல்ல பிறகு அனைவரும் சந்தோஷமாக உரையாடி உணவினை உண்டுவிட்டு வெளியே வந்தனர். ஹோட்டல் வெளியே இருந்த ஐஸ் கிரீம் தள்ளுவண்டியில் அனைவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் கயல் சிறுபிள்ளைத்தனமாக ஐஸ்கிரீமை ஒழுவ விட்டு சாப்பிட சனா அவளின் சுடிதார் துப்பட்டாவால் கயலின் முகத்தையும் உடையையும் துடைத்துவிட்டாள்.
" இன்னும் சின்ன குழந்தை மாதிரி சாப்பிடுற கயல் " என்றால் சனா கயலிடம் குறைப்பட அதனை பார்த்த ஆர்.எல்
"அக்கா தங்கச்சி பாசம்னா இதுதான் கிரிஸ்டல் " என்று கிண்டலடித்து
" கயலுக்கு மேரேஜ் ஆனாலும் இப்படி தான் இருப்பீர்களா ?"என்று கேட்க
" ஏன் மேரேஜ் ஆனா நாங்க மாதிரி விடுவோமா என்ன?" என்று கயல் சனாவை அணைத்துக்கொண்டு கேட்டாள்.

ВЫ ЧИТАЕТЕ
ஆயிரங்காலத்துப் பயிர்
Любовные романыஇரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...