40
அனிருத் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு விட்டான் என்று தெரிந்ததும் ஆர்எல் அவன் காரில் இருந்து போனை எடுக்க வேண்டும் என்று வேகமாக சென்று தனது புது ஸ்கூட்டியை எடுத்து கொண்டு மாலுக்கு விரைந்தாள்.சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரே ஒரு தெரு ஓரத்தில் கயல் கை காண்பித்தால். அப்போதுதான் ஆர்.எல் கயல் ஸ்வீட் வாங்கிக் கொண்டு தனக்காக இங்கு காத்துக் கொண்டிருப்பது ஞாபகம் வந்தது. அவளுக்காக வண்டியை நிறுத்த கயல்" உங்களுக்கு எவ்ளோ நேரம் போன் ட்ரை பண்றேன்? நீங்க எடுக்கவே மாட்டீரீங்க?" என்று கேட்க ஆர்.எல் அனிருத்தை பிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில்
"நீ உட்காரு நான் சொல்லுறேன் ..."என்று அவளை ஏற்றிக்கொண்டு
"என் மொபைல் என் எம்.டி காருல இருக்கு இப்ப நான் அதை டேரக்டா எடுக்கப் போக முடியாது
நீ ஹொல்ப் பண்றியா அது ஏன் என்று அப்புறம் சொல்லுறேன்?" என்று கயலிடம் ஸ்கூட்டியில் சென்ற வாறு கேட்டாள்நம்முடைய கயில் பயம் என்றால் அது என்ன என்று கேட்க கூடியவள் அல்லவா ?அதனால் அவள் தைரியத்துடன்
"அதுல என்ன அக்கா நான் என்ன பண்ணனும் சொல்லுங்க நான் கரெக்டா பண்றேன்" என்று சொல்ல இருவரும் மாலுக்கு சென்றனர்.
அனிருத் இன்னும் புறப்படவில்லை என்பதனை ஆர்எல் பார்க்கிங்கில் அவனுடைய காரின் மூலம் அறிந்து கொண்டாள். இருவரும் உள்ளே சென்றதும் ஆர்எல் அனிருத் எங்கே என்பதனை பார்த்தாள். அவனுடைய கார் பூட்டப்பட்டிருந்ததால் அதனைத் திறந்து எடுப்பது கடினம் என்பதால் அனிருத்தை தேட ஆரம்பித்தனர். டீசர்ட் களை பார்த்துக்கொண்டிருந்த அனிருத்தை கயலிடம் காண்பித்து ஒரு திட்டத்தை கூறினால் ஆர்எல்.
அந்த திட்டத்தை கேட்டுக்கொண்டிருந்த கயல் அதன்படி நடக்க தயாரானாள்.அனிருத் தேவையான உடைகள் எல்லாம் வாங்கிக்கொண்டு வெளியே இருந்த ஐஸ்கிரீம் பார்லரில் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு திரும்புகையில் ஐஸ்கிரீம் எதிரில் இருந்த கயல் மீது விழுந்தது. அதனை கயில் எதிர்பார்த்தாலும் எதிர் பாராதது போல்
" அறிவு இருக்கா?கண்ண எங்க வீட்டுல வெச்சிட்டு வந்துட்டியா? பைத்தியக்காரன்..." என்று பயங்கரமாக கத்தினாள்.
YOU ARE READING
ஆயிரங்காலத்துப் பயிர்
Romanceஇரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...