கிறிஸ்டிலாவிற்கு ஹாஸ்டலின் உணவு பிடிக்காமல் போக சனாவிற்கும் அதே நிலைமை தான் என்றாலும் அவளுக்கு அது பழகிப்போனது.
மறுநாள் விடிந்ததும் கிறிஸ்டிலாவும் சனாவும் அலுவலகத்திற்கு கிளம்பினர்.
அலுவலகத்தில் முதல் நாள் என்பதால் கிறிஸ்டிலா பயப்பட சனா அவளை அமைதியாக்கினாள். ஒரு வழியாக இருவரும் காலை உணவருந்த சென்றனர் .
காலை உணவு பொங்கல் என்பதால் சனா ஓட்டலில் உண்பதாக சொல்லி விட்டு வேலைக்குப் புறப்பட்டாள். அவளுக்கு பிடிக்காத உணவுகளில் பொங்கலுக்கே முதல் இடம்.கிறிஸ்டிலா ஏற்கனவே இன்டர்வியூவுக்கு வந்துள்ளதால் அலுவலகத்திற்கான வழி தெரியும். ஆதலால் உணவு உண்ட பிறகு தனியாகவே அலுவலகம் சென்றாள்.
சனா காலை உணவுக்காக ஒரு ஹோட்டலுக்கு சென்று அங்கு பூரிக் கிழங்கு வாசம் தூக்கவே ஊழியரிடம் "பூரி ஒரு செட்ணா " என்றாள்.அவர் "மேடம் பூரி இப்பதான் காலியாச்சு! கடைசி செட் ஒருத்தர் இப்பதான் மேடம் பார்சல் ஆர்டர் பண்ணாறு" என்று தூரத்தில் போன் பேசிக் கொண்டிருந்த அபிலாசைகளை கைக்காண்பிக்க
சனா" உனக்கு இருக்குடா!" என்று மனதில் எண்ணியவாறு ஊழியரிடம்
"அண்ணா நானும் அவரும் ஒன்னா தான் வந்தோம். அவர் என் ஹஸ்பென்ட்னா. அவர் தான் போன் வந்ததுனால என்னை ஆர்டர் பண்ண சொன்னாரு .ஆனால் அவனே ஆர்டர் பண்ணிட்டு இருக்கான். நீங்க அந்த பார்சலை எடுத்துட்டு வாங்கனா." என்று சொல்ல ஊழியர் சந்தேகத்துடன் பார்த்தார்.அவரிடம் சனா
"என்னனா?நீங்க நம்பலையா? யாருனா ஒரு பூரிக்குப் போய் சொல்லுவாங்களா? இருங்க நான் நிரூபிக்கிறேன் !"என்று "அபிலாஷ் ....."என்று அது ஓட்டல் என்றும் பார்க்காமல் சத்தமாக கூப்பிட்டாள்.
அபிலாஷ் யார் தன்னை அழைப்பது என்று திரும்பிப் பார்த்தவன் நான் தான் என்று சனா கை காண்பிக்க என்ன என்று சைகையால் போன் பேசியவாறே கேட்டான்.
" ஒன்னும் இல்லை!" என்று சனா தலையாட்ட அவன் தலையைத் திருப்பிக்கொண்டான்.
" பார்த்தீர்களா அண்ணா !சீக்கிரம் பார்சல் எடுத்துட்டு வாங்க!" என்றதும் அவன் பார்சலை எடுத்து வந்து சனாவிடம் கொடுத்தான். பணத்தை ஊழியரிடம் கொடுத்துவிட்டு போனில் பேசிக் கொண்டிருந்த அபிலாஷை " பாய்" என்று சொல்லிக் கொண்டே வெளியே சென்றாள்.
YOU ARE READING
ஆயிரங்காலத்துப் பயிர்
Romanceஇரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...