அவள் ஓடுவதை பார்த்து அவ்வளவு நேரம் இறுக்கமாக இருந்த மனம் சற்று லேசாக அவன் இதழில் புன்னகையை கொடுத்தது.
சனா இன்னும் வராததால் கிறிஸ்டிலாவே முழுச் சமையலையும் தனி ஆளாக முடித்தாள். தேவிற்கு தேவையான அளவு உணவினை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தோட்டம் வழியாக பின்புறம் விட்டிற்குச் சென்றாள். அங்கு அவன் குளித்து முடித்து ஒரு கோப்பினை ஆராய்ந்து கொண்டிருந்தான் .சாப்பாட்டுடன் வந்தவளை பார்த்து தேவ்
" நம்பி சாப்பிடலாமா?" என்று நக்கலாக கேட்க
" என் சமையல் மணம் எட்டு ஊருக்கு மணக்கும்! தேவ் என் சமையலுக்கு எவ்வளவு பேர் அடிமை தெரியுமா?" என்று தனது முடியினை பின்னாடி போட
"எட்டூருக்கு மண்க்க வேணாம்! பக்கத்துல இருக்க எனக்கே வரவில்லையே!" என்று நகைக்க அவள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாப்பாட்டின் கீழே வைத்தாள்.
சாப்பாட்டின் முன் கீழ் அமர்ந்தவன் கிறிஸ்டிலாவிடம்
"கிறிஸ்டிலா ரென்ட் நீ எவ்வளவு சொல்லவே இல்லையே?"
" நீங்க இப்ப எங்க வீட்டுக்கு கெஸ்ட் மாதிரி வந்து இருக்கீங்க !அதனால நீங்க அதைப்பற்றி யோசிக்க வேண்டாம்! நாளைக்கு நான் உங்களுக்கு இதைவிட நல்ல வீடா பார்த்து தரேன் தேவ்!" என்று அவள் உணவைப் பரிமாற உணவு உண்ணும் முன்னரே கிறிஸ்டிலாவின் அக்கறை கலந்த வார்த்தைகள் அவன் வயிறை நிறைத்தது.கிறிஸ்டினாவின் மனமோ" இவரு வேற எல்லாத்தையும் விட்டுட்டு வந்து இருக்காரு !இப்ப அவரு கிட்ட கொடுக்க காசு இருக்குமான்னு தெரியல .நாமளே ரென்ட் பே பண்ணிடலாம்!" என்று எண்ணியது.
" ஆனா கிறிஸ்டிலா எனக்கு இந்த வீடே போதும்! வேற வீடு பார்க்காத!" என்று தேவ் இட்லியை குருமாவில் பெசிய
"ஏன் தேவ்?"என்றாள் தயக்கத்துடன்.
" இப்ப என்கிட்ட பெரிய வீட்டுல தங்குற மாதிரி பணம் எல்லாம் இல்ல. இந்த வீட்டுக்கு ரென்ட் கொடுக்கிற அளவுக்கு தான் இருக்கு .சோ எனக்கு இந்த வீட்டுக்கு ரெட் அண்ட் அட்வான்ஸ் எவ்வளவு கேட்டு சொல்லு?" என்று சொல்ல கிறிஸ்டிலாவிற்கும் வேறு வழி தெரியாததால் அவளும்" சரி!" என்று தலை அசைத்தாள்.
அப்போது சனாவின் ஆட்டோ சத்தம் கேட்கவே கிறிஸ்டிலா அவளை பார்த்துவிட்டு வருவதாக செல்ல முற்படும் போது தேவ்
"கிறிஸ்டிலா மணம் எட்டூருக்கு மணக்குற அளவுக்கு இல்லனாலும் டேஸ்ட் நாக்கை ருசிக்க வைக்குது!" என்று புன்னகையுடன் சொல்லி உணவில் கண் பதிக்க அவனை சிறிது நேரம் நின்று ரசித்தவள் சனாவின் குரல் கேட்க அவள் அங்கிருந்து தனது வீட்டிற்குச் சென்றாள்.அப்பொழுது கலைப்பில் வந்த சனா
"சாரி கிறிஸ்டல் இன்னிக்கு லேட் ஆகிடுச்சு! டின்னர் ரெடி பண்ணிட்டியா ?"என்று சமையலறைக்குள் செல்ல
"சனா நான் என் பாஸ பின்னாடி வீட்டுல தங்க வைத்திருக்க!"என்று சொன்னதும் என்னவென்று புரியாமல் சனா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். பிறகு கிறிஸ்டிலா நடந்தது அனைத்தையும் கூற
" நீ பண்ணதும் நல்லதுதான்! கஷ்டத்திலே இருப்பவருக்கு ஹெல்ப் பண்ணிருக்க! பட் அவரு இங்க எவ்வளவு நாள் இருப்பாரு?" என்று கேட்க "எனக்கு அதைப்பற்றி எல்லாம் தெரியல. அவர் எவ்வளவு நாள் இங்க இருக்கிற நினைக்கிறாரோ இருக்கட்டும் உனக்கு ஏதாவது ப்ராப்ளமா ?"என்று கேட்க
"எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல .நீ இங்க தங்க வைத்ததுக்கு யாரும் உன்ன தப்பா பேச கூடாதுன்னு தான் கேட்டேன் ?"என்று கிறிஸ்டிலாவின் கன்னத்தில் கைவைத்து சொல்ல
" ஆயிரம் பேர் ஆயிரம் பேசத்தான் செய்வாங்க சனா .என் மேல நம்பிக்கை இருக்கறவங்க என்கிட்ட பேசுனா போதும். நீ என்ன நம்புற தானே?" என்று கேட்க
" உன்ன நம்பாம வேற யாரை நம்ப போறேன் கிறிஸ்டல்?" என்று அவளை கட்டி தழுவினாள்.
YOU ARE READING
ஆயிரங்காலத்துப் பயிர்
Romanceஇரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...