46

59 4 0
                                    

46
மறுநாள் காலையில் போலீஸ் நிலையத்திற்கு லோகேஷ் எப்பொழுதும் போல கர்வத்துடன் இல்லாமல்  வாடிய முகத்துடன் உள்ளே நுழைந்தார். போலீசாரிடம் அனுமதி வாங்கிய லோகேஷ்  ஒரு சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்த அனிருத்தை  பார்த்து கண் கலங்கினார்.
எப்பொழுதும்" அனிருத்..." என்று கம்பீரத்துடன் அழைக்கும் குரல் அன்று தாழ்ந்து அழைத்தது.

"டேட்"என்றவனின் கையை பிடித்து
" நமக்கு  வலை விரிச்சிருக்காங்க அனிருத்" என்று லோகேஷ் சொல்ல உடனே "அந்த தேவ் தான டேட்" என்றான் கோபத்துடன்.

அவன் சொற்களை கேட்டு முகம் வாட்டம் அடைந்தவர் "இல்லா ஆர்டி  நமக்கு எப்போதும் கேட்டது பண்ணமாட்டான் .
இந்த வலையை விரித்தது நமக்கு ரொம்ப பழக்கமான எப்ஆர் கம்பெனி எம் டி உன்  பிரிண்ட்  பிரவீன் தான்" என்றதும் அனிருத்தால் அதனை நம்ப முடியவில்லை .அவன் அதிர்ச்சியில் சிலையாக மாறினாலும் அவர்   கூறிய வார்த்தைகள் அவன் மனதை ஈட்டியால் கிழிப்பது போலிருந்தது.
" உன் கூட பிவரெஜ் பாக்டேரி  ஸ்டார்ட் பண்றதா சொல்லி வாங்கின இடம் ஒரு கவர்மெண்ட் பிளேஸ் அனிருத்.நீ சைன் போட்டுக் கொடுத்த  அவனுடைய பேப்ர்ஸ் எல்லாம் அவன் தன் இல்லீகல் பிஸ்னஸுக்கு யூஸ் பண்ணியிருக்கா.

என் கூட ஷேர் வெச்சிருக்கிறத்தா சொல்லி என் மேல நிறைய பிளாக்  மணி போட்டிஇருக்கான்"
என்று அவர் வலியுடன் சொல்ல
" இது எல்லாம் ஏன் டேட் பண்ணான்?"
" நம்ம ஆபிஸ் அழிச்சு அவன்  ஆபீச மேலே கொண்டுவர தான் அனிருத்.ஆனா  அவன் டிராப்புள போய் நாம விழுந்துட்டோம் பாரு... இப்படி நம்மை ஏமாற்றி அந்த பழியையும்  நம்ம மேலே போட்டுட்டான்" என்றார் கைலாஷ் .

"டேட் நீங்க எப்படி ரிலீஸ் ஆனிங்க?"  என்று அனிருத்  கேட்க அப்போது அங்கு வந்தான் தேவ். அவனை அன்புடன் வரவேற்ற லோகேஷ்
"ஆர் டி தான் எனக்காக பெயில் வாங்குனா  அனிருத் .உனக்காகவும் லாயர கூட்டிட்டு வந்திருக்கான் "என்று சொல்ல அனிருத் முகம் மாற்றமடைந்தது .
"எனக்காகவா?" என்று கேட்க தேவ் சிறை கதவின் ஓட்டையில் அனிருத்தின் கையைப்பித்து
" இந்த மாதிரியான சிச்சுவேஷன்ல என் தம்பிய நான் எப்படி விடுவேன்?" என்று கூற அங்க ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

ஆயிரங்காலத்துப் பயிர்Where stories live. Discover now