தனிமையில் இருந்த தேவ் பொறுமையாகப் படிக்க தொடங்கினான்.
தேவை அலுவலகத்தில் சந்தித்த நாளின் தேதியினை குறிப்பிட்டு கிறிஸ்டிலா
"உங்கள நான் இவ்வளவு வருஷம் கழிச்சு பார்ப்பன நினைச்சு கூட பார்க்கல ராகுல்.. முதல் தடவை பார்த்த போது அவ்வளவு எளிமையாக இருந்திங்க..உங்களையும் உங்களின் ரன்னிங் ஸ்டைலை பார்த்து நான் உங்க ஃபேனான ராகுல். நான் உங்க்கிட்ட கூட கிண்டலாகப் பேசின.ஆனா அந்த சந்திப்புதான் கடைசியாக இருக்கும் நெனச்சு.அதனால தான் நான் உங்களை பற்றி வந்த செய்தி எல்லாம் கட் பண்ண.. ஆனா எனக்கு அந்த சந்தோஷமும் ஒரு வருஷத்துக்கு மேல கிடைக்கல.. அதற்கப்புறம் உங்கள் பற்றி எந்த நியூஸும் வரல... உங்கள பத்தி எதுவும் வராத நெனச்சு நான் ஒரு ரசிகையா இந்த நோட்டை மட்டும் உங்க ஞாபகமாய் என் கூடவே வெச்சுக்கனன். முதல் நாள் ஆபிஸ்ல எம்டி தேவுனு சொன்னாங்க .ஆனா நீங்க நடந்து வந்திங்க.. உங்கள முதல் தடவை பார்த்த மாதிரியே அதே மாதிரி கூலிங் கிளாசை கழட்டி தலையை கோதிக்கொண்டு வந்தீங்க.. எனக்கு உங்கள பார்த்து அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போய் குட்மார்னிங் சொன்னேன். எனக்கு அவ்வளவு சந்தோசமாய் இருந்தது ..ஆனா உங்க முகம் சுழிப்பே காண்பித்தது உங்களுக்கு என்ன சுத்தமா நியாபகம் இல்லனு. உங்களை பார்த்த சந்தோஷமே எனக்கு போதும் .பாஸ்ட் சொல்லி உங்களுக்கு அது ஞாபகம் வர வைக்கவும் எனக்கு தோணல.. அதனால நீங்க ராகுலா வேண்டாம் எல்லாருக்கும் இருப்பது போலவே எனக்கும் தேவா இருங்கள் ..."என்று எழுதி இருந்தாள்.அப்பொழுதுதான் தீபக்குடன் கிறிஸ்டிலாவை பார்த்த நினைவு லேசாக அவனுக்கு வந்தது. அவனுக்கு கிறிஸ்டிலாவின் முகத்தை விட அவளின் கிண்டல் தான் தெளிவாக நினைவில் இருந்தது.
தேவுடன் நிஷாவினை பார்த்த தேதியினை போட்டு "நீங்க நேற்று என் கிட்ட எப்படி உங்களை பற்றி எனக்கு தெரியும் நீ யாரு அப்படின்னு கேட்டிங்க? அதற்கு பதிலான இந்த நோட்ட கொடுத்து உங்களை எனக்கு எய்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் போதே தெரியும் .உங்களுக்கு ஃபேனா இந்த மாதிரி நியூஸ் பேபர் கட்டிங்ஸ் எல்லாம் வெச்சிருக்க. நான் உங்க ஃபேன் அவ்வளவு தான் உங்களுக்கு நான். வேற எதுவும் இல்ல அப்படின்னு சொல்ல தான் இந்த நோட்ட பையிலுல மறச்சு வச்சு உங்க ரூமுக்கு வந்தேன். ஆனா அப்ப நிஷா வந்து உங்களை ஹக் பண்ணதும் எனக்கும் மனசு உடைஞ்சு போச்சு. நான் உங்க ஃபேனு அவ்வளவு தான் சொல்ல வந்த..ஆனா எனக்கு அந்த இன்சிடென்ட் பார்த்ததும் அது மட்டும் தானா நான் உங்களுக்கு இல்லனு என் மனசு சொல்லுது..." என்று எழுதியிருந்தாள்.
தேவ் எதுவும் இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த தேதியினை போட்டு
" உங்கள நான் இழந்துட்டனு நினைச்சேன் தேவ்.ஆனா உங்கள நான் திரும்பவும் பார்த்துட்டேன் .உங்கள இந்த கஷ்டத்துல விட்டு போக மனசு ஒத்தக்கல. அதான் நான் உங்களை என் வீட்டுக்கு பின்னாடி தங்க வெச்சிருக்கன்.. நீங்க அந்த நிஷாவை விரும்புல அவ உவங்களுக்கு துணையா உங்கள அக்கறையா பார்த்துப்பானு நினைச்சு தான் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னீங்கனு சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷம் தேவ்... உங்கள் கஷ்டத்தைப் பார்த்து நான் சந்தோஷப்படுறத்து இதுவே கடைசியாக இருக்கட்டும் ..இனி நான் உங்களை தனியா விட மாட்டேன் ..உங்களை அக்கறையா பாத்துக்குறேன்.." என்று எழுதி இருந்தாள்.
YOU ARE READING
ஆயிரங்காலத்துப் பயிர்
Romanceஇரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...