2

169 4 1
                                    

"இவனா ?"என்று அதிர்ந்து
" நீ எப்படி இங்க அஅ...அபி..... அபிலாஷ் ?"என்று கேட்க
"இது எங்க ஊரு நான் இங்கதான் இருக்கிறேன். நீ எப்படி இங்க ?"என்று  அவன் கைக்கட்டி கேட்க
"அந்த ஆபீஸ்ல தான் வொர்க் பண்றேன்!" என்று ஒரு கட்டிடத்தை காண்பிக்க அவன்
" இப்படி பேசிட்டு இருக்க போறியா? எனக்கு டைம் ஆச்சு வரியா இல்லையா?" என்று மிரட்டும் தோரணையில் அவனின் மூக்கு கண்ணாடியை சரி செய்தவாறே கேட்க அவளும் இப்போது நமக்கு ஹாஸ்ட்டல்  போவது தான் முக்கியம் என்று   எதுவும் பேசாமல்அந்த பைக்கில் உயரமாக இருக்கும் சீட்டில் கஷ்டப்பட்டு ஏறி அமர்ந்தாள்.
"சறுக்கு மரம் மாதிரி  இருக்கு..எப்படி இதுல அத்தை பவிலாம்  உட்காருராங்க ?இந்த குண்டன் வேற இப்படி ஒரு பைக் வாங்கியகருக்கான்."
என்று மனதினுள் வறுத்தவள் "இப்போ நாம எதாவது சொன்னோம்னா இந்த குண்டன் இங்கேயே விட்டுட்டு போனாலும் போவான்!"  என்று அமைதியானாள்.

இருட்டில் அவன் பைக் சாலையில் சீறியது. அந்தப் பேதைக்கோ அந்த  சீற்றத்தில் அந்த பைக்கில் ஒரு நிலையாய் அமர முடியவில்லை.
கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் "அபி.." என்று கூப்பிட அவன் வெறுப்பாய்
"டோன்ட் கால் மீ லைக் தட் !"
"இவன....." என்று பொங்கியவள்
பிறகு அமைதியாய் "அபிலாஷ் ஸ்லோவா போறியா !என்னால  உட்கார முடியல !பயமா இருக்கு!"
என்று தனது நிலையை சொல்ல
"எனக்கு இப்படித்தான் வேகமாக ஓட்ட வரும்!" என்று ஒரே வரியில் அவளின் பேச்சை அடைத்தான்.
இதற்கு மேல் அவனிடம் கேட்டும் பயனில்லை என்று  சனாவும் அமைதியானாள்.
ஹாஸ்டல் வந்ததும்
"தேங்க்ஸ் அபிலாஷ் !"என்று சொல்லி  உள்ளே சென்றவளை கண் இமைக்காமல் பார்த்தவன் போன் வர அதனை பேச பைக்கை ஒரு  ஓரமாய் நிறுத்திவிட்டு சென்றான்.
பிறகு போன் பேசிவிட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்தவுடன் டயரில் காற்று குறைவாக இருப்பதைக் கண்டு அதிர்ந்தான் அபி.
அப்பொழுது சிரிப்பு  சத்தம் கேட்க மேலே நிமிர்ந்து பார்த்தவன் அங்கு பால்கனியிலிருந்து சனா
"வேகமா தான உனக்கு போக தெரியும்! பொறுமையா போக பழகுடா  குண்டா!" என்று முணுமுணுத்தாள்.

ஆயிரங்காலத்துப் பயிர்Wo Geschichten leben. Entdecke jetzt