தேவால் கிறிஸ்டிலா கண்கலங்கி நிற்க தேவ் மேனஜரிடம
"அவங்களாவது நேற்றுதான் ஜாயின் பண்ணினாங்க .பட் யூ? 10 யியர்ஸ் வர்க் பண்றீங்க! நீங்க செக் பண்ண மாட்டீங்களா? அப்படியே என் டேபிளுக்கு சென்ட் பண்ணுவிங்களா?"என்று அந்த கோப்புகளை காண்பித்தவன் "இதுல திரீ பேஜஸ் தலைகீழா இருக்கு .இது எல்லாம் பார்க்க மாட்டீங்களா?" என்று மேசையை தட்டினான்.
கிறிஸ்டிலாவின் மனதில்"தலைக்கீழா பின் பண்ணதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்! நான் கூட பெரிய தப்பு பண்ணிட்டேன் நெனச்சேன்!" என்று நினைத்தாள்.
போதுமென்ற அளவிற்கு திட்டிய பிறகு தேவ் கிறிஸ்டிலாவையும் மேனேஜர் ரவியையும் பார்த்து "இது தான் லாஸ்ட் டைம்மா இருக்கணும். இனி இப்படி நடந்தா அவ்வளவுதான்!" என்று அதட்டி அவர்களை அனுப்பினான் .
வெளியே வந்த கிறிஸ்டிலா ஆர்.எல்லிடம்
" பாஸ் பர்பெக்ஷன் எதிர்பார்ப்பவருனு நீ சொன்னபோது கூட நம்பல. ஆனா மூனு பேஜ் தலைகீழா பின் பண்ணதுக்கு ஒரு மணி நேரம் திட்டினாரு ஆர்.எல் "என்று புலம்ப" ஆமா அவரு அப்படிதான்.நான் தான் சொன்னேன்ல . இனி தப்பு பண்ணாத" என்று தனது ஒரு வருட அனுபவத்தால் அறிவுரை வழங்கினாள்.சனா வழக்கம்போல் சுபாவிடம் கடலை போட்டுக்கொண்டு வேலை பார்த்தாள். அப்பொழுது அபிலாஷா சனாவின் பின் இருக்கையில் அமர்ந்த ஊழியரிடம் வேலை விஷயமாக எதனையோ பேசிக் கொண்டிருந்தான். அது கூட தெரியாமல் சனா சுபாவிடம் "சுபா என் பிரெண்ட் கிறிஸ்டல் என் கூட ஹாஸ்டல இருக்கறத்துனால தான் என்னால அங்க ஜாலியா இருக்க முடியுது!" என்று சொல்ல அது அபிலாஷ் காதில் விழுந்தது.
" கிறிஸ்டிலா?" என்று மனதினுள் சொல்லிக் கொண்டே அவனின் அறைக்குச் சென்றவன்
"ஏய் சனா! சின்ன வயசுல ஏதோ இன்பாக்ச்சுவேனால பார்த்து சிரிச்சா அதுக்கு நீ எல்லார்கிட்டயும் சொல்லிடுவேனு ப்ளாக் மெயில் பண்ணி உனக்கு எத்தன வேலை செய்யவெச்ச! என அண்ணானு நினைக்கிறானு கிறிஸ்டிலா என்கிட்ட சொன்னதும் அவளை தங்கையா நினைக்கிறத்தா உன்கிட்ட சொன்னல சனா ? ஆனா நீ ப்ளாக் மெயில் பண்ணி உன் வர்க்கலாம் செய்ய வைத்தல்ல! இப்ப இருக்குடி உனக்கு!" என்று மனதில் ஒரு திட்டம் தீட்டினான்.
YOU ARE READING
ஆயிரங்காலத்துப் பயிர்
Romanceஇரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...