அவனை அங்கு பார்த்ததில் சனாவிற்கு தலையே சுற்றுவது போலிருந்து.
சுபா கூட கடலை போட்டதில் அவன் வந்ததை சனா கவனிக்கவேயில்லை .எம்.டி அபிலாஷை பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது "அபிலாஷ் இஸ் ஸச் யூ டெலன்டடு காய்! இ வாஸ் புரமோடட் அஸ் ய டீம் லீடர் இன் ஒன் யியர் "என்று புகழ சனாவின் மனதில் மெல்லிய காற்றுமில்லாமல் புயலும் இல்லாமல் நடுவில் ஒரு காற்று அடித்தது.
" இவன் நமக்கு டீம் லீடரா?"என்று அதிர்ந்தாள்.
மீட்டிங் முடிந்ததும் அனைவரும் தங்கள் இடத்திற்குச் சென்றனர் .கே டிம் மெம்பர்ஸ் மீட்டிங்கில் சனா ஒரு வித பயத்துடன் கலந்து கொண்டாள்.
ஏனென்றால் அன்று காலை தானே சனா அவனை ஏமாற்றினாள். அதனால் தன்னை ஏதாவது கூறி விடுவானோ என்ற பயம் உள்ளுக்குள் இருந்தது .ஆனால் அபி அலுவலக விஷயம் பற்றி மட்டுமே பேசினான். ஒவ்வொரு முறையும் சனா அபிலாஷ் ஏதாவது சொல்லிவிடுவானோ என்ற பயத்துடன் அவனை கடந்து செல்ல அவன் அவளைக் கண்டு கொள்ளவே இல்லை.
கிறிஸ்டில ஆர்.லிடம் சொல்லிவிட்டு ரெஸ்ட் ரூமுக்கு சென்றாள்.
செல்லும் வழியில் தொலைபேசியினை நோண்டிக் கொண்டு வந்தவனுக்கு கிறிஸ்டிலா மீது மோதினான்.
நிலைதடுமாறிய கிறிஸ்டிலா பின்னர் சுதாரித்து தன்னை நிலை படுத்தினாள்.இடித்தது தேவ் என்று தெரிந்ததும் "குட் மார்னிங் .ச்ச்...குட் ஆஃப்டர்நூன் சார்...!" என்று குழந்தை சல்யூட் அடிக்க அவன் அவளிடம் எதுவும் சொல்லாமல் திரும்பவும் போனில் மூழ்கியவாறு சென்றான்.ஆபிஸ் நேரம் முடிந்ததும் சனா ஹாஸ்டலுக்கு செல்ல ஆட்டோவிற்கு காத்திருந்தாள்.
அப்பொழுது அபிலாஷ் வாகனம் அவளை கடந்து சென்று எப்பொழுதும் போல தெருவின் ஓரத்தில் நின்றது.
"ஏன் அங்க நிக்கிறானு இன்னிக்கே தெரிஞ்சே ஆகனும்!" என்று சனா ஒரு முடிவுடன் அபியை நோக்கி நடந்தாள்.
ஹெல்மெட் அணிந்திருந்த ஆபியிடம் அதனை கழட்டுமாறு கைகளால் சைகைக்காட்ட அவன் ஹெல்மட்டை கழற்றி என்னவென்று புருவத்தை உயர்த்த
" நீ ஏன் இங்க நிக்கிற ?"
"நான் இங்க நின்னா உனக்கு என்ன?"
" நானும் பார்க்கிறேன் ஒரு வாரமா இங்க நிற்கிற நான் ஆட்டோ ஏறுனதும் என் பின்னாடியே பைக்ல ஃபோலோ பண்ற.நீ என்ன நினைச்சுட்டு இருக்க?" என்று கேள்வி கேட்க
"நீங்க அப்படியே சீமராணி உங்களை ஃபோல பண்றாங்க பாரு !"என்று முகத்தை சுளித்துக் கொண்டு மூக்குக் கண்ணாடியை அழுத்தினான்.
"அப்படிங்களா சார்! அப்ப எதுக்கு நீங்க இங்க நிக்கிறீங்க?" என்று கைகட்டி கேட்க
"நான் ஒன்னும் உனக்கெல்லாம் நிக்கல! அங்க பாரு!" என்று எதிரில் இருந்த பால் கடையை கைக்காண்பிக்க
"நான் தினமும் இராத்திரி இங்க பால் வாங்கிட்டு போவ. இங்கதான் பால் நல்லா இருக்கும்! காலையில் எல்லாம் பால் வாங்க முடியாது! அதனால தான் ராத்திரி கடைக்காரர் புதுப்பால் எடுத்துட்டு வந்ததும் வாங்கிட்டு போவ! புரியுதா!" என்றதும் தான் சனாவிற்குச் அபிலாஷிடம் ஒருவர் எதனையோ கையில் கொடுக்கும் காட்சிகள் ஞாபகம் வந்தன...
"இது தானா காரணம் !சனா உன் கற்பனைக்கு அளவேயில்லாம போயிடுச்சு! அசிங்கப் பட்ட சனா!"என்று மனதில் புலம்பியவள் எதிர்பார்ப்புக்கள் தோற்றதில் மனமுடைந்து தலை தாழ்த்திய சனாவிடம் அபிலாஷ்
"அப்புறம் நான் நீ அங்க ஆட்டோவுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்ததை பார்த்திருக்க !அந்த ஹாஸ்ட்டல இறங்குவதையும் பார்த்திருக்க அதோட சரி! நான் பால் வாங்குனதும் என் வீட்டுக்கு உன் ஹாஸ்டல் வழியாதான் போகணும்! அதான் அந்த பக்கம் போறேன் !இதுல நீ சொல்ற மாதிரி உன்னை ஃபாலோ பண்றது எல்லாம் ஒன்னும் கிடையாது! உன் கிட்ட தப்பா நடந்துக்க வந்ததாலதான் உன்னை காப்பாத்துன. அந்த இடத்தில யாராக இருந்தாலும் காப்பாற்றி இருப்பேன்!சோ டோன்ட் திங்க் லைக் தட் !அன்ட் என்னை உன் ஹஸ்பென்ட்டுனு சொல்லிட்டு திரியாத!" என்று முறைத்தவண்ணம் ஒரு நீண்ட அறிவுரையை கொடுத்துவிட்டு பால் கடைக்காரர் அவனிடம் கொண்டுவந்து கொடுத்த பாலினை வாங்கிக்கொண்டு
"எல்லாம் புரிந்திருக்குன்னு நினைக்கிறேன்!" என்று அழுத்தமான குரலில் சொல்லி வண்டியில் சென்றான்.சனாவிற்கு அவள் மேலேயே வெறுப்பு .
"ஏன் இப்படி நினைக்கிறோம்! ஏன் எப்பொழுதும் அவனைத் தன்னவனாக நினைக்கிறோம்!" என்று தன்னையே திட்டிக் கொண்டவள் அவனிடம் இனி பேசக்கூடாது அவனைப் பற்றி நினைக்க கூடாது என்று முடிவெடுத்தாள்.கிறிஸ்டிலாவும் சனாவும் ஹாஸ்டலுக்கு திரும்பினர்.
அந்த உப்புச்சப்பில்லாத உணவினை உண்ண இருவருக்கும் பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியும் அவர்களுக்கு இல்லை .
உறங்கும் உன் கிறிஸ்டிலா அவளின் முதல் நாள் அலுவலக அனுபவம் பற்றிக் கூற சனா அபிலாஷை சந்தித்தது பற்றியும் அவனிடம் அவமானம் பட்டது பற்றியும் கூறினாள்.கிறிஸ்டிலா சனாவிடம்
"சரி விடு சனா !நீ அபிலாஷ் அண்ணா பழையபடி இருப்பாருனு அவர்கிட்ட பேசுன! ஆனா அவரு உன் மேல் கோபமா இருக்காருனு நினைக்கிற! அதான் அப்படி நடந்திருக்காரு ..பி ஹாப்பி!நீ கவலைப்படாத! அவரு கிட்ட நீ பேச விரும்பலனா பேசாத !ஆனா எனக்கென்னவோ அபிண்ணா பழசெல்லாம் மறந்துட்டு உன் கிட்ட பேசுவாறுனு தோணுது!"என்று சமதானம் செய்தாள்.மறுநாள் இருவரும் வழக்கம்போல் அலுவலகத்திற்கு புறப்பட்டனர் .கிறிஸ்டிலா ஆர்.எல் வருகைக்காக காத்திருந்தாள் .
அவள் வந்ததும் நேற்று முடிக்காமல் பாதியில் விட்டுச் சென்றதை ஆர்.எலிடம் கேட்டு வேகமாக முடித்தாள்.
அதனை எடுத்துச் சென்று மேனேஜரிம் கொடுக்க அதனை அவர் சரிவர பார்க்காமல் எம்.டிக்கு அனுப்பினார்.
அந்த கோப்புகளை பார்த்த தேவ் மேனேஜரை கோபத்துடன் அழைத்தான்.
கேள்வியால் அவரை விளாசியவன் அந்த கோப்புகளை தயாரித்த கிறிஸ்டிலாவையும் அழைத்தான்.என்னவென்று தெரியாமல் கிறிஸ்டிலா பதற்றத்துடன் அவன் அறைக்குச் சென்று பயத்தோடு "குட் மார்னிங் சார்!" என்று தனது குழந்தை சல்யூட் அடிக்க அதனை பார்த்து மேலும் வெறுப்பான தேவ்
" நீங்களா எப்படி ஆபீஸ்க்கு வரீங்க? இவங்கள யாரு செலக்ட் பண்ணது ?"என்று திட்டிக் கொண்டிருக்கும் போது கிறிஸ்டிலாவின் கண்கள் கலங்கியது.
STAI LEGGENDO
ஆயிரங்காலத்துப் பயிர்
Storie d'amoreஇரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...