33

51 3 0
                                    

பார்ட்டிக்கு தேவையான வேலைகளை எல்லாம் முடித்தபின் அபி தன் வீட்டிற்குச் சென்று தயாராகி பார்ட்டி நடைபெறும் இடத்திற்கு வந்தான். அபிராமியும் கைலாசும் திருச்சிக்கு வந்து அபி ஏற்பாடு செய்துள்ள ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு பிறகு திருமணத்திற்கு புறப்படலாம் என்று முடிவெடுத்து  அபிலாஷிடம் அதனை தெரிவித்தனர். அபி வாசலில் நின்று பார்ப்பது உள்ளே வருவதுமாய் இருக்க மணி அவனிடம் "ஏன்டா இப்படி உள்ளேயும் வெளியும் போயிட்டு போயிட்டு வர?" என்று கேட்க தலைமுடியை அழுத்தக் கோதிய அபி
"சனா வரலானு  பார்த்தேன் !"என்று சொல்ல நக்கலாய் சிரித்தான் மணி.
"சனா என்ன சின்ன குழந்தையா ?அவ வருவாடா!" என்று  அவனை உள்ளே அழைக்க
"நான் அவ  வந்ததும் வரேன் !"என்று அபி சொல்ல மணி சிரித்தான்.
" ஏன்டா இப்படி சனா மேல இவ்வளவு பைத்தியமா இருக்க?" என்று கேட்க அப்பொழுது சனா வாசலுக்கு வந்தாள் .
அபிலாஷ் "ஏன்னா  சனா என்ன எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டாடா!" என்று அபியின் குரல் கேட்க சனா அபி  தன்னைப் பற்றி என்ன கூறுகிறான் என்பதை கேட்க ஆர்வமாய் வாசலில் நிற்க வைத்திருந்த ஒரு பொம்மை பின்னால் மறைந்து கொண்டு அவர்கள் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தாள்.

அந்த ஆர்வம் அவளுக்கு விபரீதமாக முடியும் என்பது அவளுக்கு அப்போது தெரியவில்லை. மணியிடம் அபி
"அவளுக்கு நானா எவ்வளவு கஷ்டம் தெரியுமா? என்ன சின்ன வயசிலேயே யார்கிட்டயும் விட்டுக்கொடுக்க மாட்டா.."என்று அவன் காதலில் பேச  அதனை கேட்டுக்கொண்டிருந்த மணி
"  அப்ப என்னடா அபி சீக்கிரமா மேரேஜ் பண்ணிக்கோ! இப்பதான் உங்க அப்பாமேல இருந்த பழி பொய்யுனு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சுலடா... முறைப்படி  குடும்பத்தோடு ஊருக்கு வந்து சனா வீட்டில  பொண்ணு கொடி
கேட்டு  அவள கல்யாணம் பண்ணிக்கோடா!" என்று மணி சொல்ல அவனை முறைப்புடன் பார்த்த அபி அவனின் தோளில் கையை போட்டு
" அது மட்டும் நடக்காது..." என்று கோபத்துடன் கூறினான் .

அவனின் கோபத்தை எதிர்பாராத சனாவும் மணியும் அதிர்ந்தனர்.
" ஏண்டா நடக்காது?" என்றும் மணி அதிர்ச்சியில் கேட்க
" பின்ன அந்த ஆளு வீட்டுக்கு எங்க அப்பா அம்மா போய் பொண்ணு கேட்கணுமா? அதெல்லாம் முடியாது ?"என்றான் வெறுப்புடன்.
"மாமாவை ஏன்டா அந்த ஆளுனு  சொல்ற ?"என்று கேட்க கோபத்தில் மணியின் சட்டையை பிடித்தவன்
" யாரு டா மாமா? அதெல்லாம் ஏழு வருஷத்துக்கு முன்னாடியே முடிஞ்சிடுச்சு..எப்ப அவரு எங்க அப்பா திருடன் பேரு வாங்கி நிற்கும்போது எங்க அப்பாக்கு சப்போர்ட்டா ஒரு வார்த்தை கூட பேசவில்லையோ அப்பவே எல்லாம் முடிஞ்சிடுச்சு
.... கஷ்ட நேரத்தில கைக்கொடுக்காத உறவு என்ன உறவு?" என்று எரிச்சலுடன் சொன்னான்.

ஆயிரங்காலத்துப் பயிர்Where stories live. Discover now