பிறகு கிறிஸ்டிலா சனாவை அழைத்துக்கொண்டு பின் வீட்டிற்கு வந்தாள்.
சாப்பிட்டு முடித்து இருந்த தேவ் பாத்திரங்களை தண்ணீரில் கழுவி வைத்துவிட்டு தரையில் அமர்ந்து கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
கிறிஸ்டிலா கதவைத் தட்டி உள்ளே வரலாமா என்று கேட்க வா என்று எழந்தான். தன் பின் வந்த சனாவை காண்பித்து கிறிஸ்டிலா
" தேவ் ஸர் இவ என் பெஸ்ட் ப்ரெண்ட் சனா. என் கூட தான் ஸ்டே பண்ணிருக்கா !" என்று அறிமுகப் படுத்த சனா தேவுக்கு கைகொடுத்தாள்.
அப்பொழுது தேவ் "நைஸ் டு மீட் யு! ஐ அம்...!" என்று அவன் சொல்லி முடிக்கவில்லை கிறிஸ்டிலா நடுவில் புகுந்து "அவளுக்குத் தெரியும் உங்க பெயர் தேவுனு!" என்று சொல்ல
தேவ் நாட்களாய்
"என்னை பற்றி நிறைய சொல்லிருக்க போல?" என்று சிரிக்க சனா
"ஆமா!நிறைய சொல்லிருக்கா!ஆனா தேவுனு சொல்லமாட்டா.." என்று சனா கிறிஸ்டிலாவை பார்க்க "சொல்லாத சனா பிளீஸ்!"என்று கெஞ்சியதால் சனா பேச்சினை மாற்றி
"ஆமா ஸர் உங்களுக்கு இந்த வீடு பிடிச்சிருக்கா?ஆல் ஓகேவா?"என்று கேட்க தேவ்
"யா.."
"சரி ஸர் நெக்ஸ்ட் என்ன பண்ணலாம்னு இருக்கிங்க !"என்று சனா தயக்கத்துடன் கேட்க தேவ்
"எதனா ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்க .என் பேரன்ட்ஸ் என் பெயருல சேவ் பண்ண மணி இருக்கு.அத் த சேம் டைம் நானும் கொஞ்சம் சேவ் பண்ணிடுங்க . இதெல்லாம் வெச்சு என்ன மாதிரியான பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு யோசிக்கணும் !"என்று பெருமூச்சு விட
"ஆல் த பெஸ்ட். எந்த ஹெல்ப்பா இருந்தாலும் எங்க கிட்ட தயங்காம கேளுங்க தேவ்!"என்று சனா சொல்ல கிறிஸ்டிலாவும் "ஆமா ஸர்!" என்றாள்.பிறகு சனாவும் கிளிஸ்டிலாவும் அங்கிருந்து புறப்பட்டனர் .இவ்விருவரின் வார்த்தைகள் தேவிற்கு புது உத்வேகத்தை கொடுத்தது.
கிறிஸ்டிலா தேவ் படுப்பதற்கு தேவையான பாய் தலையனையை கொண்டுவர தேவ் ஆழ்ந்த யோசனையில் வீட்டிற்குள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான் . பாய் தலையனையை கீழ வைத்தவள் அவள் வந்தது கூட தெரியாமல் யோசனை இருக்கும் தேவிடம்
அவள் "தேவ் பழச நினைச்சுட்டு இருக்காதிங்க!" என்று சொல்ல அப்போதுதான் நிகழ்விற்கு வந்த தேவ்
" கிறிஸ்டிலா என்னால இன்னும் நம்ப முடியல நிஷா எனக்கு துரோகம் பண்ணிட்டான்றத்த.என்னால அதை ஏற்றுக்கவே முடியல." என்று தரையில் அமர்ந்து தலையில் கை வைத்துக் கொள்ள கிறிஸ்டிலா அவனிடம் பொறுமையாக
"உண்மையை நம்புறது கஷ்டமா இருந்தாலும் அதுதான் உண்மை தேவ். நீங்க பழசையே நினைக்காம நெக்ஸ்ட் என்ன பண்ணலாம்னு யோசிங்க .உங்களை ஏமாற்றுனவங்க முன்னாடி எப்படி தலை நிமிர்ந்து வாழறத்துனு பாருங்க!" என்று சொல்ல அவனும் தலையசைத்தான்.
YOU ARE READING
ஆயிரங்காலத்துப் பயிர்
Romanceஇரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...