26
கிறிஸ்டிலா அபிக்காக வேலை தேட அவளின் தேடலை கண்டுபிடித்த தேவ் ஏன் என்று கேட்டதால் கிறிஸ்டிலாவும் மறைக்க முடியாமல் அபியின் ஆபீஸில் நிகழ்ந்த நிகழ்வுகளை கூறினாள். அதனை கேட்டு மனம் வருந்திய தேவ் அவனுக்கு வேலை தேடுவதாக கூறினான்.
வேலை தேடுதலில் ஒரு மாதம் கழிந்தது.
சனா ஆபீஸில் கமலேஷ் மீது ஒரு கண் வைத்துக் கொண்டாள். அபிலாஷின் மீது உள்ள அழுக்கினை எப்படி போக்குவது என்று யோசித்துக்கொண்டிருந்தாள். இப்படி இரண்டு மாதங்கள் கழிய அபிலாஷ் மீது உள்ள நிதி சுமையை குறைக்க சறா பணத்தினை கொடுத்து உதவினாள்.
அதனை வாங்க மறுத்த அபிலாஷிடம்
" நீ என் கஷ்டத்தை உன் கஷ்டமா பார்க்கிறது உண்மைதான் நானும் உன் கஷ்டத்தை என்னுடையது தான் பார்க்கிறேன் அபி ப்ளீஸ் வாங்கிக்கோ!" என்று சொன்னதும் தான் அவன் பணத்தை வாங்கினான்.
தேவும் அவனுடைய கார்மென்ட்ஸில் நாட்கள் கழிக்க அவன் வாடகை இடங்களில் நடக்கும் தனது கார்மெண்ட்ஸ் சொந்த இடம் வாங்கி அங்கு கார்மஸ் கட்டி நடத்த திட்டமிட்டு கொண்டிருந்தான்.ஒரு நாள் பிரியங்கா தனது தோட்டத்தில் இருக்கும் முருங்கைக்காயை கோடாரியால் அறுக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க அந்த கோடாரியை வாங்கிய தேவ் முருங்கைக்காயை அறுத்துக் கொடுக்க தனது மனதிலிருந்து நீண்டநாள் கேள்வியை பிரியங்கா தேவிடம் கேட்டாள்.
"ஏன் தம்பி இப்பதான் சொந்தமா தொழில் பண்றீங்கள அப்ப ஏன் இந்த சின்ன வீட்டுல இருக்கணும் சொந்தமா ஒரு வீடு வாங்கி விட வேண்டியதுதானே!" என்று ப்ரியங்கா கேட்டுவிட
அதற்கு தேவ்
" அக்கா இந்த வீட்ல தான் நான் சந்தோஷமா இருக்கேன் எனக்கு இந்த வீட்டை விட்டு போக மனசு இல்லக்கா!"
" அதுக்கு நீ இங்கேயே இருந்துடுவியாப்பா?" என்று கேட்க
" இல்ல அப்படின்னு சொல்ல மாட்டேன் முதல்ல எனக்கு ஒரு சொந்த இடத்தில கார்மெண்ட்ஸ் கட்டணும் அப்புறம் எனக்குனு ஒரு வீடு வாங்கனும் அதற்கப்புறம் தான் நான் இந்த வீட்டை விட்டுப் போவன்!" என்று அறுத்த முருங்கைக்காய்களை பிரியங்காவிடம் கொடுத்தவன்
"அப்படி போனா கூட வாரத்துக்கு ஒரு தடவை உங்களையும் வீட்டையும் பார்க்க வருவேன்!" என்று அவன் புன்னகையுடன் சொல்லிவிட்டு தனது வீட்டிற்குச் சென்றான்.
இதனை எல்லாம் வெளியில் வேர்க்கடலை புடைத்துக் கொண்டிருந்த கிறிஸ்டிலா கேட்டுக்கொண்டிருந்தாள்.
YOU ARE READING
ஆயிரங்காலத்துப் பயிர்
Romanceஇரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...