44

57 3 3
                                    

44
கயலை டார்ச்சர் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வேலைக்கு அமர்த்திய அனிருத்துக்கு தான் பெரும் தலைவலியாக இருந்தது. ஒரு வேலையை சொன்னால் அதற்கு எதிர்மாறாக கயல் ஒரு வேலையைச் செய்வாள்.அனிருத் கோபப்பட்டாலும் கடைசியில் அவனே கயலின் குழந்தை தனம் நிறைந்த குறும்புகளுக்கும் அவளின் திமிருக்கும் தோற்றுப் போவான். ஆனால் அந்தத் தோல்வியை அனிருத் உணரவில்லை .
அனிருத் லேப்டாப்பில் கண் பதித்திருக்க  உள்ளே   நுழைந்த கயல்"ஸர் 'எப் .ஆர்' கம்பெனியில இருந்து   உங்கள பார்க்க வந்திருக்காங்க ஸர்" என்று சொல்ல
" நான் அவங்களுக்காக  தான் வெயிட் பண்றேன் வர சொல்லு!" என்றான்.
ஆனால் அதற்கு கயல் சிரித்துக்கொண்டே
" நான் அவங்களை பை மினிட்ஸ் வெயிட் பண்ணச் சொல்லி இருக்கேன் சார். இப்ப  உங்களுக்கு என்ன அவசரம் அவங்கள பொறுமையா பாருங்க" என்றவள் அனிருத் சொல்வதைக் கூட கேட்காமல் வெளியே சென்றாள்.
" இவளை..." என்று கோபப்பட்டவனால் அவளிடம் கோபம் மட்டுமே பட முடிந்தது.
அறையிலிருந்து வெளியே வந்த கயல்
"என்ன பண்ணாலும் இவன் நம்மல  விடுமாட்டுறானே!"  என்று எண்ணியவள் சிறிது நேரம் கழித்து அந்த ஊழியர்களைத் கூட்டிக்கொண்டு அனிருத்  அறைக்குச் சென்றாள்.
அவர்களை வரவேற்று அவர்கள் முன் இருக்கையில் அமர வைத்தவன்
" நீங்க நல்ல பிராபிட்  வருமுனு சொன்னதாலதான் நான் உங்க கூட ஷேர் வைக்க ஓகே சொல்லி இருக்கேன் .உங்க பாசும் எனக்கு கொஞ்சம் உதவியாக இருந்திருக்கிறாரு."என்று அவன் சொல்ல எப்.ஆர்.உழியர்களில் ஒருவன்
" சார் உங்க கூட வொர்க் பண்றதுக்கு எங்க பிளேஷர் " மற்றொருவன்" சார் இந்த பேப்பர் சயின் போட்டு தந்தீங்கனா எல்லாம் விஷயமும் கன்ஃபார்ம் ஆகிடும்" என்று ஒரு பேப்பரை நீட்ட அனிருத் சைன் போட வர கயல் அவன் காதில்
"சார் இவங்கள பார்த்தா நல்லவங்க மாதிரி தெரியல சார்." என்று சொல்ல  அவன் அதனை பொருட்படுத்தாமல் சைன் போட்டுக் கொடுத்தான்.
அதனை வாங்கி இருவரும் வெளியே சென்றதும் அனிருத்  தன்னருகில் நிற்கும் கயலிடம்
" உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? நீ சொன்னா நான் கேட்கணுமா? அந்த எம்டி எனக்கு எவ்வளவு ஃபேவர் பண்ணி இருக்காரு தெரியுமா? நான் எவ்வளவு   டீல்ஸ் வெச்சிருக்கேன் தெரியுமா?" என்று  அவன் கோபமாக கேட்க கயல் சிறிதும் அஞ்சாமல் தெரியாது என்று திமிராக சொன்னாள்.

ஆயிரங்காலத்துப் பயிர்Where stories live. Discover now