11

92 4 0
                                    

அபிலாஷின் மனமோ ஒரு நிலையாக இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. சனாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன்  வெளியே போவதும் பிறகு குடும்ப பிரச்சனையை நினைத்து உள்ளே வந்து அமர்வதுமாயிருந்தான்.
மதிய உணவுக்காக வெளியே வந்தபோது மும்முரமாக உணவு கூட உண்ணாமல் வேலை பார்க்கும் சனாவை பார்த்ததும் வருந்தியவன் சாப்பிட போகுமாறு சொல்ல நாவெடுத்தான் ஆனால் சொல்ல முடியாமல் திரும்பவும் தனது அறைக்கு சென்றான்.
இப்பொழுது எப்படியாவது பேசியே ஆக வேண்டும் என்ற முடிவுடன் மனதிற்கு கட்டளையிட்டு வெளியே சென்றவன் அங்கு சனாவை கேவலமாக பார்த்துக்கொண்டிருக்கும் சனாவின் சக ஊழியரான கமலேஷை பார்த்ததும் கோபம் கொண்டு"சனா" என்று அந்த தளமே அதிருமாறு கத்தினான்.

அதிர்ச்சியடைந்த சனா என்னவென்று புரியாமல் விழித்து நிற்க அபிலாஷ் கமலேஷை முறைத்தவாறு "கம் டூ மை ரூம்!" என்று தனது அறை கதவினை வேகமாக திறந்து கொண்டு சென்றான்.
சனாவும்  என்ன நிகழ்கிறது என்று புரியாமல் அவனின் அறைக்குச் சென்றாள். அங்கே அபிலாஷ் கோபத்தின் உச்சியில் மூக்கு கண்ணாடியை கழட்டி ஒரு பெருமூச்சோடு அதனை அணிந்து கொண்டு இருக்கையில் அமர்ந்தான். தலையில் கைவைத்துக்கொண்டு சனாவை இருக்கையில் அமருமாறு சைகை காண்பித்தான்.

"டூ கோபி" என்று போன் செய்து கூறி அமைதியாக அமர்ந்திருந்தான். ஐந்து நிமிடம் வரை இருவரிடையே  நிலவியது .காப்பி வந்ததும் காபி எடுத்துக்கொள்ளுமாறு சனாவிடம் சைகை காண்பிக்க வேண்டாம் என்று மறுத்தாள்.
" காலையிலிருந்து  நீ வர்க் பண்ற   எதுவும் சாப்பிடல .அதான் காபி எடுத்துக்கோ!"என்றதும் அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள
" லன்ச் பிரேக் முடிய போகுது. இதுக்கு அப்புறம் நீ சாப்பிட முடியாது !சோ பிளீஸ் காபிய  எடுத்துக்கோ!"என்று காப்பியை அவள் பக்கம் திருப்ப
"இவன் என்ன ரகம்னு தெரியலையே?" என்று யோசித்தவாறு சனா காபியை எடுத்து அருந்தினாள்.

‌பசியை விட வேலையை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே வேகமாக காபி அருந்துவிட்டு அபிலாஷின் அனுமதியைக் கூட பெறாமல் அவன் அறையில் இருந்து வெளியே வந்த சனா தனது வேலையை பார்க்க தொடங்கினாள் .
‌அபிலாஷின்  மனம் மதில் மேல் பூனை போல் ஒரு நிலை கொள்ளவில்லை .ஒரு பக்கம்தா அவன் மனதில் அவனுக்கே தெரியாமல் அமர்ந்துள்ள சனா   மற்றொரு பக்கம்  அவளின் குடும்பத்தால் இரு முறை அசிங்கப்படுத்தப்பட்ட அவனுடைய குடும்பம். யார் பக்கம் தலை சாய்வது என்று புரியாமல் அலைந்தவனின் மனம் இறுதியில் ஒரு திட்டத்தோடு இருபக்கமும் அவனின் மனம் தலை அசைத்தது .
‌கமலேஷின் பார்வையில் இருந்து சனாவை காப்பாற்ற அவன் வெளியே ஒவ்வொரிடமும் பேசிக்கொண்டு ஒரு கண்ணால் சனாவை ரசித்தவண்ணம் மற்றொரு கண்ணால் கமலேஷை  எரித்த வண்ணம் அன்றைய நாளை கழித்தான்.

ஆயிரங்காலத்துப் பயிர்Where stories live. Discover now