5

94 3 0
                                    

"என்ன பண்றது சனா? வொர்க் இருக்கே !நான் இங்க இருக்கிற வரைக்கும் ஜாலியா இருப்போம்! அப்புறம் எப்போதாவது என்கிட்ட பேசணும்னா  அதான் போன் இருக்கே?" என்று அவளையும் தலையில் கொட்ட கயல் தீபகிடம்
" நாங்க உன்ன மிஸ் பண்ணுவோம்டா அண்ணா!" என்று கண்கலங்க  தீபக் இருவரையும் அரவணைத்துக்கோண்டான்.

மஞ்சள் நீராட்டு விழா நாளும் வந்தது.
அபிலாஷ் குடும்பம் வருவதாக  தமிழ் கூறியதால் சாணக்கியர் குடும்பமும் மகிழ்ச்சியில்  திளைத்தது .
சனாவும் தயாராவதில் கொஞ்சம் அக்கறை கூடுதலாக எடுத்துக்கொண்டாள்.
கிறிஸ்டிலா,சனாவின் சித்தப்பா சித்தி என அனைவரும் வீட்டுக்கு வந்தனர் .
தமிழ் வீட்டின் மாடியில் பங்ஷன் என்பதால் வீடே ஜெகஜோதியாக இருந்தது.
சித்தப்பா சுந்தரம் தீபக்கிடம்
" டேய் கண்ணா! கொஞ்ச நாள் பெரியப்பா வீட்டில் இருக்கப் போவதா சொன்ன! இப்ப திரும்பவும் பாம்பே போக போறதா சொல்றியே? கொஞ்ச நாள் நம்ம வீட்டுலயும் இருந்துட்டு போகக் கூடாதா?" என்று கேட்க தீபக்
" இன்னைக்கு நம்ம வீட்டுலதான் தங்கப் போறேப்பா! கயல் சனாக்கூட  கொஞ்ச நாள் இருந்துட்ட!இப்ப பங்சென் முடிஞ்சதும்  அப்படியே நாம் வீட்டுக்குபோயிடலாம் !"என்று சொல்ல சனாவும் கயலும் "நாங்க அண்ணா கூட தான் தங்குவோம்!" என்று குழந்தை போல் சொல்லி சுந்தர் வீட்டுக்கு வரப் போவதாக சொன்னர்.

அபிலாஷ் குடும்ப வருகைக்கு எதிர்பார்த்து அனைவரும் ஏமாந்துப்போயினர்.
எந்த சண்டையும் இன்றி மஞ்சள் நீராட்டு விழா நல்லபடியாக முடிந்தது .
சாணக்கியர் ,சுந்தரம்,தீபக் மாமன் வீட்டு சீர் செய்தனர். நீராட்டு விழா முடிந்ததும்  தமிழிடம் சொல்லி விட்டு தீப்க வீட்டிற்குச் சென்றனர்.
மீதமிருந்த நாட்களை அண்ணன் தங்கைகள் மகிழ்ச்சியாகக் கழிக்க  சனா புறப்படும் நாளும் வந்தது.
கிறிஸ்டிலா  தன்னுடன் ஹாஸ்டலில் தங்க போவதாக கூறியதால் சனா அவளுக்கும் ஹாஸ்டலில் தன்னுடன் தங்க ஏற்பாடு செய்தாள்.
பெற்றோரிடம் சொல்லிவிட்டு தீபக்குடன் கிறிஸ்டில்லாலின் புது வீட்டை நோக்கிப் போகும்போது வழியில் பராமரிக்கப்படாமல் இருந்த வீட்டினை பார்த்த சனா  தீபகிடம்
" கைலாஷ் மாமா! நம்ம கிட்ட பேசாம இருந்தாலும் வீட்டுக்காவது அப்பப்ப வந்து போகலாம் தான!"

ஆயிரங்காலத்துப் பயிர்Where stories live. Discover now