25

79 4 0
                                    



இருவரின் நிலைமையை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்று கொண்டிருக்க சனா நிகழ்வது புரியாமல் அபி என்று அவன் அருகில் செல்ல போக நினைவு திரும்பிய கமலேஷ் தடுமாற்றத்துடன் எழுந்து வந்து என் காலைப் பிடித்துக் கொண்டான் எம்டி என்னாச்சு அபி எனது இதெல்லாம் என்று கோபப்பட அபி சார் இவன் நம்ம ஆபீஸ்ல வொர்க் பண்ற ஒரு பொண்ணு போட்டோ எடுத்தா அதான் என்று சொன்னால் யார் அது என்று கேட்காதா என்று சொன்னால் அவள் உடைந்து போவார் என்பதால் எதுவும் சொல்லாமல் அபி நின்றான்.

அவனின் அந்த அமைதியை அவன் வாழ்க்கையை புரட்டிப் போட காத்திருந்தது.

அபிலாஷின் மௌனத்தை பயன்படுத்திக் கொண்ட கமலேஷ் பொறுமையாக எழுந்து நின்றான். எம்.டி அபிலாஷிடம்
"கமலேஷ் இஸ் நாட் லைக் தட்.யாரு அந்த பொண்ணு எனக்கு யார் கிட்ட இருந்தும் கம்ப்ளைன்ட் வரலையே?" என்று வினவ அபி" சார் ...'என்று எதையோ சொல்ல வர கமலேஷ் முந்திக்கொண்டு
" யூ ஆர் ரைட்  ஸர்.நான் அப்படிப்பட்டவன் கிடையாது. வேணும்னா நீங்க இங்க இருக்க லேடிஸ் கிட்ட கேட்டு பாருங்க. நான் அவங்கள சிஸ்டர் மாதிரி தான் பார்க்கிறேன்!" என்று வலியில் தட்டுத்தடுமாறி  கூறினான். அனைவருக்கும் அபிலாஷ் கமலேஷை பற்றி கூறிய செய்து நம்பும்படியாக இல்லை.ஏன் என்றால் அவனின் அந்த கொடுர பார்வையை யாரும்  பார்த்ததும் கவனித்ததும் இல்லை. நம்பும்படியாக பொய் கூறும் கமலேஷின் வார்த்தைகளை பொறுக்க முடியாது அபி அவனின் சட்டையை பிடித்து
" எப்படி பொய் சொல்ற?உன் கூட  வர்க் பண்றவங்கள தங்கச்சி மாதிரி பாக்குறவனா நீ?" என்று அடிக்கப் போக அவனை தடுத்த எம்டி அபிலாசிடம்
" நீங்க சொல்றது நம்பர் மாதிரி இல்ல. அப்ப அவர் தப்பானவன் நீங்க தான் சொல்றீங்க சரி அவரு தப்பா இருந்தா அந்த பொண்ணு வந்து என்கிட்ட கம்பிளெய்ன்ட்  பண்ண சொல்லுங்க. அந்த பொண்ணு பெயர் தான் நீங்க சொல்ல மாட்டுறீங்களே!" என்று சொல்ல அவன்
"அந்த பொண்ணு பெயர் சொன்னா அவங்க போய்டுவாங்க ஸர்"
"சரி அந்த பொண்ண என்கிட்ட வந்து கம்ப்ளைன்ட் பண்ண சொல்லுங்க நான் சீக்கிரட்டா வைக்கிறன்!" என்று வருண் சொல்ல
"சார் அவர்களுக்கு இவன் போட்டோ எடுத்தது கூட தெரியாது சார் .அவங்களுக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம் .நான் தான் இவன் போட்டோ எடுக்குறது பார்த்தேன். அது அவன் கிட்ட இருந்து டெலிட் பண்ணிட்டேன் சார் .அந்த பொண்ணுக்கு அது நாம தாக தெரிய வேண்டாம் சார் .தெரிஞ்சா மன கஷ்டம் தான் இவனுக்கு நீங்க என்ன தண்டன தறன நினைக்கிறீர்கள் தாங்க சார்.
இந்த விஷயத்தை இப்படியே சுமூகமா  முடிச்சுடலாம் சார் .இது தான் எல்லாருக்கும் நல்லது !"என்று சனா மீது உள்ள அக்கறையில் சொன்னான். அபிலாஷின் அமைதியை  தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த கமலேஷ் புத்தி பயங்கரமான திட்டம் தீட்டியது. அனைவரும் அபிலாஷின் வார்த்தையைக் கேட்டு என்ன முடிவெடுப்பது என்று நிற்க கமலேஷ்  தலையை  பிடித்துக்கொண்டு தடுமாற்றத்துடன் "யாருக்கு சார் நல்லது? இதை இப்படியே முடிக்கனும்னு சொல்றாரு ?யார் அந்த பொண்ணு கேட்டா சொல்ல மாட்டாரு .அந்த பொண்ணுக்கும் தெரியாதுன்னு சொல்றாரு. இதெல்லாம் நம்புற மாதிரியா சார் இருக்கு? எல்லாம் பொய் சார்!" என்று சொல்ல
"எது பொய்!" என்று அபிலாஷ் கொதிக்க கமலேஷ்
" பொய் சர் .இப்படி எல்லாம் ஒரு தரால பொய் சொல்ல முடியும்னு நான் இப்பதான் பார்க்கிறேன் சார் !"என்று சொல்ல அபி கோபத்தில்
"எதுடா பொய்!" என்று கத்த எம்டி அவனைச் அமைதிக்காகும் படி கூறினார். கமலேஷ் எம்டியிடம்
"சர் இவரு என்ன  ஃபோட்டோ எடுத்த அப்படினு எல்லாம் சொல்லி அடிகள சார். முதல்ல நான் அப்படி போட்டோ எல்லாம் எடுக்கவும் இல்லை சார் ."என்று சொல்லி அபியை பார்த்தவன்
" சார் இன்னும் ஒரு மாசத்துல எனக்கு அபிலாஷ் ஸர் விட மேல் போஸ்டிங்கல  ப்ரமோஷன் கிடைக்கப்போகிறதுல ஸர் .அதனாலதான் என அடித்து என்னை வேலையை விட்டு போகச் சொன்னாரு. நீங்க வந்ததும் மாற்றி யாராலயும் யோசிக்க முடியாத அளவுக்கு பொய் சொல்றாரு சார் .நான் தப்பு பண்ணனு சொல்றாருல சார். அந்த போட்டோ காண்பிக்க சொல்லுங்க!" என்று அபிலாஷின் அமைதியை தனக்கு ஏற்றவாறு மாற்றி பேசினான். எம்டி அபியிடம் போட்டோஸ் கேட்க "சார் அதான் நான் டெலிட் பண்ணிட்டேனே!" என்று சொல்ல கமலேஷ்
" அது அவர் கிட்ட கேட்டா அவர் அப்படிதான் சொல்லுவாரு .ஏன்னா அப்படி ஒன்னு நடக்கவேயில்லை சார்!"என்று சொல்ல எப்படியும்

ஆயிரங்காலத்துப் பயிர்Where stories live. Discover now