47

74 3 0
                                    

47
ஒரு மாதகால டிரெயினிங்கை முடித்த  சனா வீட்டுக்கு வந்து ஒருவாரம் விடுப்பு எடுத்தாள்.

அந்த ஒரு மாத காலம் அவள் அபியுடன்  எந்த விதத்திலும் பேசவில்லை என்றாலும் அவள் மனம் நன்றாக மாறியிருந்தது.
ஆர்.எல் கடைக்கு கிறிஸ்டிலாவும் தேவும் காரில் வந்து கொண்டிருந்த பொழுது கிறிஸ்டிலா தயக்கத்துடன்
"ஏன் தேவ் லோகேஷ் சார் உங்களுக்கு சொந்தமான சொத்தை சொன்னபொழுது வேண்டாம்னு சொன்னீங்க?" என்று கேட்டவுடன் தேவ் காரை நிறுத்தினான்.
அவனின் பதிலுக்காக காத்து கொண்டிருந்தவள் பக்கம்  முகத்தை திருப்பி  பொறுமையாய்
" இதை நீ சொல்லும் போது தான் ஆச்சரியமாக இருக்கலாம் கிறிஸ்டிலா!"
" ஏன் ?"என்று வியப்பாய் அவள் கேட்க
"செல்ப் ரெஸ்ப்கட் பத்தி நீ சொல்லித்தான் எனக்கு புரிஞ்சது... இப்ப நான் என் உழைப்பால கிடைச்ச வயதிலேயே சந்தோஷமா இருக்கேன்... சோ... எனக்கு எதுக்கு மத்தவங்க சொத்து.. இட்ஸ் ட்ரு  ரைட் ?_என்று கேட்க ஆம் என்று  தலை ஆட்டியவள்
"நான் எதற்கு கேட்டனா...  அதுல உங்க அப்பாவுடைய உழைப்பும் இருக்குல தேவ்... அதனாலதான் ..மத்தபடி எதுவுமில்லை..".
"இட்ஸ் ஓகே.. எனக்கு வேண்டாம் கிறிஸ்டிலா" என்று அவன் காரை எடுத்தான் .
ஆர்.எல் கடை வந்ததும் தேவ் போன் பேச வெளியே வெளியவே நின்றுவிட கிறிஸ்டல் உள்ளே சென்றாள்.
ஆர்.எல்லுடன் சேஷாத்திரி பேசிக்கொண்டிருக்க கிறிஸ்டிலாவை ஆர்.எல்  பார்த்ததும் "கிறிஸ்டல் இவர ஞாபகம் இருக்கா?" என்று கேட்க அவளும் "இருக்கு ஆர்.எல்..." என்று  கூற சேஷாத்திரி அவளிடமும் பொதுப்படையாக பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

கிறிஸ்டல்"இவரு எப்படி இங்க வந்தாரு? அன்னிக்கே கிளம்பிட்டாருனு தான சொன்ன" என்று அவள் முடிப்பதற்குள்
" இரு...கிறிஸ்டல் அப்பவே அவரு கிளம்பிட்டாருதான் .இப்ப சேஷாத்ரிக்கு இங்கேயே வேலை கிடைச்சு இருக்கு .அதான் சொல்லிட்டு இருந்தாரு" என்றாள்.
"என்ன ஆர்.எல் இனி உன் அவர நீ அடிக்கடி பார்க்கலாம் போல?" என்று கிண்டலடிக்க ஆர்.எல்லின் முகம் மாறியது.

ஆயிரங்காலத்துப் பயிர்Where stories live. Discover now