விட்டால் போதும் என்று ஓடி வந்த கிறிஸ்டிலா ஒருவித பயத்துடன் தனது இருக்கையில் அமர்ந்தாள். வெளியே படபடப்பாக இருந்தாலும் உள்ளுக்குள்ளே அவனின் கண்களை பார்க்க முடியாமல் சிரம் தாழ்த்திய தருணம் மனதில் வந்து போனது .
அதனை ரசிக்கவா வெறுக்கவா என்று யோசித்தவள் முன் பல கோப்புகள் முதலில் என்னை முடி என்று அழைத்ததால் அவளும் அதனை எல்லாம் மறந்து வேளையில் ஆயத்தமானாள். அன்றைய இரவு நிகழ்வுகளை தனது மனதிலிருந்து ஓரம் வைத்து வேலைக்குச் சென்ற சனா அபிலாசை கண்டுகொள்ளாமல் தனது வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்.ஆனால் அபிலாஷ் அவளைப் பார்க்கவேண்டும் என்று வெளியில் வருவதும் அவளை அடிக்கடி அழைத்து வேலை கொடுப்பதுமாய் இருந்தான். அழைப்பதெல்லாம் ஒழுங்காய் வேலை செய்யாமல் செய்வதற்கு தான் என்று அவனின் பாசத்தை புரியாமல் எண்ணினால் சனா.
இரவு அவன் வருவதற்கு முன் ஆட்டோவில் ஏறினாள்.அதனை பார்த்த அபிலாஷ்
"ஏன் இன்னைக்கு நம்ம கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல!" என்று ஆட்டோவை பின்தொடர ஆட்டோ வேறு வழியில் சென்றதும் ஏன் ஆட்டோ அவ்வழியில் போகிறது என்று எண்ணியவாறு அவனும் அவளை பின் தொடர்ந்தான்.
ஆட்டோ சனாவின் புது வீடு முன் நின்றது. அதிலிருந்து இறங்கிய சனாவைப் பார்த்தவன் அவள் ஒரு வீட்டிற்குள் செல்வதை பார்த்து குழம்பினான் .
"இவ ஏன் அந்த வீட்டுக்குள்ள போறா ?"என்று யோசனையில் அவன் வண்டியை அந்த வீட்டின் முன் விட்டுவிட்டுச் காம்பவுண்ட் கதவை திறந்து உள்ளே சென்றான்.
யாரோ உள்ளே வருவதை மேல் மாடியில் இருந்து பார்த்த பிரியங்கா கீழே இறங்கினாள். பெண்கள் இருக்கும் வீட்டில் ஒரு ஆண் நுழைந்ததால் அவள் மனம் படபடத்தது.சனா எங்கு போனாள் என்று தெரியாமல் வீட்டின் முன்னரும் பக்கவாட்டிலும் இருந்த தோட்டத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
" யாருடா நீ ?"என்று கையில் ஒரு கட்டையுடன் வந்தவளை பார்த்து பயந்த அபிலாஷ் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க
"தனியா இருக்க பொண்ணுங்களுக்கு மயக்கமருந்து கொடுத்து...." என்று அவர் கூறிய வார்த்தைகளாளேயே அவர் இவனை என்னவாக எண்ணுகிறான் என்பதனை புரிந்து கொண்டவன்
" வேணா வேணா ..எதுவும் சொல்லாதீங்க. நான் ஒன்னு நீங்க நினைக்கிற மாதிரியானவன் இல்லை .நான்...." என்று அவன் கூறுவதற்கு முன் சத்தம் கேட்டு வெளியே வந்த சனாவும் கிறிஸ்டிலாவும் ஒருமித்த குரலில்
" பிரியங்கா அக்கா ..."என்று கத்தினர்.
VOCÊ ESTÁ LENDO
ஆயிரங்காலத்துப் பயிர்
Romanceஇரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...