9

81 3 0
                                    

நேரம் கடந்து வந்த தனது மகனைப் பார்த்து அபிராமி "அபி கண்ணா ஏன்டா  இன்னைக்கு இவ்வளவு லேட்?" என்று அவனிடம் இருந்த பால் கேனை வாங்கியவாறு கேட்க "பால் வர லேட் ஆகிடுச்சும்மா!"என்று சமாளித்து வண்ணம் உள்ளே சென்றான்‌.
"ஊருல பசும் பால் குடிச்சு பழக்கம். அதனால தான் நான் அங்க பசும் பால் வாங்கிட்டு வர சொல்றடா.இங்க அந்த காமாட்சி  பாலுல  தண்ணீர் கலந்து தராடா இல்லன்னா நான் உன்ன வாங்க  சொல்ல மாட்டேன்டா!" என்று அவருபாட்டு பேச அபிலாஷ்
"நான் உன்கிட்ட அதபற்றி எதுவும் கேட்கவில்லையேம்மா!ஏன் இப்படி பேசுற ?"என்று உடைமாற்றி சோபாவில் அமர்ந்து மூக்கு கண்ணாடியை கழட்டியவனிடம் அபிராமி
"அபி  நாளைக்கு நானும் உன் அப்பாவும் பவியை  கூட்டிட்டு  பெங்களூருல இருக்க காலேஜையும்  ஹாஸ்டலையும் பார்த்துட்டு வர போறோம்!" என்று அவள் சொன்னதும் தான் வீட்டை பற்றி எண்ணங்கள்  அபிக்கு வந்தது.

அலுவலக வேலை என்று ஓடியதால் அவனுக்கு அப்போதுதான் பெங்களூருவில் ஃபேஷன் டிசைனிங் படிப்பிற்கு சேரப்போகும் தனது தங்கையை பற்றிய நியாபகம் வந்தது .
அலுவலக வேலையால் ஒரு அண்ணனாக தனது பொறுப்புகளை செய்யாமல் தவறியதை நினைத்து வேதனைப்பட்டவன் அபிராமியிடம்
" சாரிமா நான்தான் பவிக்கு  காலேஜ் பற்றி விசாரிச்சிருக்கணும் .ஆபிஸ் டென்சன்ல மறந்துட்டேன்ம்மா. நாளைக்கு நான் லீவு போட்டுட்டு பவியை கூட்டிட்டு போய் பார்த்துட்டு வரேன் !"என்று அவன் சொல்ல
"பரவாயில்ல அபி ஆபிஸ் டென்ஷன்ல தான மறந்த . நாங்க அப்படியே பெங்களூர்ல இருக்க சரண்யா சித்தி வீட்டுக்கு போயிட்டு மூணு நாள் தங்கிட்டு வரோம் டா !"என்று அபிலாஷின் முடியை வருடியவர் தனது அறையை பார்த்து
"நீ உன் அப்பாக்கு தப்பாமல்  பிறந்திருக்கிறடா! இப்பையும் இவ்வளவு நேரம் உள்ளே உட்கார்ந்து ஆபீஸ் வேலை பார்த்துட்டு இருக்காரு டா! நாளைக்கு விடியற்காலையில் போகப்போறோம்னுறத்தையே மறந்துட்டாரு நினைக்கிற !எப்பதான் ஜனவரி மாசம் வரப்போகுதோ!"என்று மேலே பார்க்க  அபிலாஷ்
"என்னமா?" என்று சிரிப்புடன் கேட்க
"ஜனவரியில தான் உங்க அப்பாக்கு ரிடேயர்மன்ட் வருதுடா!" என்று அவர்  புலம்பிய வாறு  சமையலறைக்குள் சென்றார்.

அபிலாஷ் அன்னையின் புலம்பளை நினைத்து கொண்டு சிரித்தவாறு தனது தங்கையிடம் சென்றான்.
போனில் மூழ்கி சிரித்துக் கொண்டிருந்த தனது தங்கையின் முடியை இழுத்து அவளை நினைவிற்குக் கொண்டு வந்தான்.
" ஏண்டி லூசு எப்பவும் போன்தானா? அத பார்த்து சிரிக்கிற?"என்று அவளிடமிருந்து  போனை பிடுங்கியவனிடம் கோபப்பட்டு தலையணையை அவன் மீது ஏறிந்தாள்.
" போனை குடு டா!" என்று போனை பிடுங்க முயற்சித்தவளை அபிலாஷ் தலையில் கொட்டி
" இதுல என்ன இருக்கு? இத பார்த்து சிரிக்குற?"
" சிரிப்புலாம் உயிரோடு இருக்கிற எங்களுக்கு தான் வரும்? நீதான் ஜடம் ஆச்சே! உனக்கு இது பத்தி எல்லாம் என்ன தெரியும் ?"என்று கத்தியவளிடம்
"என்ன பவி இப்படி பேசுற?"
" பின்ன என்னடா நீ என்கிட்ட பேசி எவ்வளவு நாளாச்சு .நாம சென்னைக்கு வந்ததுல இருந்து ஜடம் மாதிரி தான இருக்க. தங்கச்சினு நீ என்கிட்ட பாசமா பேசுறியா?" என்று கண்கலங்கியவளிடம்
" ஏன் இப்படி பேசுற பவி ?வொர்க் டென்சன்ல மறந்துட்டேன் சாரி !"என்று வருந்த  அவளும் மன்னித்ததாக காட்ட புன்னகைக்க
"சரி விடுடா அண்ணா! இதுக்கெல்லாம் சேர்த்து  நான் காலேஜ் படிக்க பெங்களூர் போனதும் வாரவாரம் ஆயிரம் ரூபா பேங்க் அக்கவுண்ட்ல போட்டு விடுடா !"என்று அவனின்  முதுகை தட்ட
" சரிங்க மேடம்! அங்க  நீங்க படிக்க போறீங்க! சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிடாதிங்க!" என்று கிண்டல் செய்ய "டேய் அண்ணா..." என்று பவி அவனை  அடிக்க  துறத்தினாள்.

பல நாட்கள் கழித்து இருவரும் சிரித்து பேசுவதை அபிராமி அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தார்.

விடியற்காலையில் மூவரும் பெங்களூருக்கு பறப்பட்டதால் அபிலாஷ் அலுவலகத்திற்கு சீக்கிரம் சென்றான்.
" நாம சீக்கிரம் வந்துட்டோம்! ஆபீஸ்ல யாரும் இன்னும் வந்திருக்க மாட்டாங்க!" என்று தனது ஆபீஸ் பேக்கினை தோளில் சரிப்படுத்தியபடி  அவன் உள்ளே செல்ல  உள்ளே பேன் போகும் சத்தத்தை கேட்டு
" ஒருத்தருக்கும் பொறுப்பில்லை. பேன் ஆப்பண்ணாம  போயிட்டு இருக்காங்க !"என்று பேன் சுவிட்ச் ஆப் செய்ய போனவனின்  கண்கள் ரோஜாப்பூ நிற தாவாணியின் பிடியில் சிக்கிக் கொண்டது..

Hi friends
Padichitu marakama comment pannunga..

ஆயிரங்காலத்துப் பயிர்Dove le storie prendono vita. Scoprilo ora