28

71 4 0
                                    

28
அதில் சனா அபிலாசுடன் கோவிலில் ஊழியர் ஒருவர் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட போட்டோ இருந்தது.  எதையும் தங்கையிடம் மறைக்காத நாம் இதனை மறைத்து விட்டோமே அவள் என்ன நினைப்பாள் என்று தலைகுனிந்தபடி சனா  கயல் கேட்பதற்கு முன்
" கயல் நான் வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாளுளையே அபிலாஷ பார்த்துட்டேன்!" என்று அவனுடன் நிகழ்ந்த சண்டை சமாதானம் பின்னர் ஏற்பட்ட பாசம் அவன் வேலையை விட்டது அவனைப் பற்றிய உண்மை ஊழியர்களுக்கு தெரியவந்தது அவனுடைய புதிய வேலை வரை எல்லாவற்றையும் கூறினாள்.
" எல்லாத்தையும் சொல்லிவியேக்கா.. இவ்வளவு நடந்திருக்கு என் கிட்ட ஒரு வார்த்தை சொன்னீயா?" என்று கயல் வருத்தப்பட
" நான் எப்படி சொல்லுவேன் கயல்! நான் அபிய பார்த்தது அவன் கிட்ட பேசுறது சொன்னா நீங்கள் கோபப்பட்டு  அவன் கூட பேச கூடாது பழக கூடாதுனு சொல்லிட்டீங்கனா ? உனக்கே தெரியும்ல கயல் எனக்கு அபினா எவ்வளவு பிடிக்கும்னு .அது மட்டுமல்ல எனக்கு அத்தை மாமானா எவ்வளவு இஷ்டம். ஆனால் அப்பா அம்மா அவங்களை பிடிக்கலைனு எங்களை பிரிச்சிட்டாங்கனா  என்ன பண்றது கயல் அதான் நான் யார்கிட்டயும் சொல்லலை!" என்று கண்ணீர் விட கயல் சனாவை அணைத்துக்கொண்டு
" அக்கா சரி விடு நீ என்கிட்ட எதுவும் சொல்லவில்லையேதான் கோபம். மற்றபடி எனக்கு அபிமாமா மேலயும் அத்தை மாமா மேலயும் கோபம் கிடையாது. நான் இதைப்பற்றி யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் .நீ பயப்படாதே நல்லதே நடக்கும் !"என்று ஆறுதல் கூறினாள். பிறகு கிரிஸ்டலை பார்க்க போவதாக கூறி விட்டு இருவரும் கிறிஸ்டிலாவின் வீட்டை நோக்கிச் சென்றனர்.
சனாவையும் கயலையும் வரவேற்ற மேரி அவர்களுக்கு காப்பி கொடுக்க கிறிஸ்டிலா சமையல் செய்து கொண்டிருந்தாள் .கயலும் மேரியும் சீரியலை பற்றி பேசிக்கொண்டிருக்க கடுப்பான  சனா சமையலறைக்குச் சென்றாள். கிறிஸ்டிலாவுடன் சமையல் முடித்து இருவரும் வெளியே வர  கயலும் மேரியும் இன்னும் அரட்டை அடித்துக் கொண்டிருந்ததால் கயலிடம் சனா
" கயல் ஆன்ட்டி நான் மொட்டை மாடிக்கு போற!"என்று கலாய்க்க கோபமான கயல் "அக்கா" என்று கோபிக்க
" பின்ன ஆன்ட்டி  கூட பிரண்ட்ஷிப் வெச்சிருந்தா  என்ன சொல்லுவாங்க ஆண்ட்டிதான் "
"ஆன்ட்டி பாருங்க!" என்று கயல் சினுங்கி மேரியிடம் முறையிட்டாள்.

ஆயிரங்காலத்துப் பயிர்Where stories live. Discover now