இதற்கிடையில் ஒரு டெண்டர் விடப்பட்டது. அதனை எப்படி எடுப்பது தன்னிடம் போதிய ஆட்கள் இல்லையே என்று தயங்கிய தேவுக்கு கிறிஸ்டிலா கொடுத்த நம்பிக்கையின் காரணமாக அதற்கு விண்ணப்பித்தான். அதற்காக அவன் தன்னிடம் உள்ள பணத்தை போட கிறிஸ்டிலாவும் தன்னால் முடிந்த அளவு பணத்தைக் கொடுத்தாள். அதன் மூலம் மற்றொரு இடத்தினை வாடகை எடுத்து அங்கு ஒரு கார்மெண்ட்ஸ் ஆரம்பித்தான்.அது மட்டும் இல்லாமல் மேலும் சில ஆடர்கள் மற்றும் அரசின் டென்டருக்கும் விண்ணப்பித்திருந்தான். அது தனக்கு சாதகமாக வரவேண்டும் என்றும் மனதில் வேண்டிக் கொண்டிருந்தான்.
மறுபுறம் ஊர் திருவிழா களைகட்டியது. எங்கு பார்த்தாலும் வண்ணமயமாய் ஜெகஜோதியாய் இருந்தது .சனா கிறிஸ்டினாவின் வீடு அவர்கள் இல்லாத கவலையில் மூழ்கி இருக்க அதனை தணிக்க கயல் தீபக்கிற்கும் சனாவிற்கும் வீடியோ கால் செய்தாள்.இருவருக்கும் உணவு இடைவேளை என்பதால் இருவரும் வீடியோ காலை எடுத்தனர். இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்த பிறகு கயல் சனாவிடம்
" அக்கா நீயாவது வந்திருக்கலாம்.. இங்க எல்லாரும் ஜாலியா இருக்காங்க..எனக்கு வெளியே போகவே பிடிக்கல" என்று வருத்தப்பட "கயல் பிளீஸ் ..அடுத்த மன்த் எனக்கு பிரமோஷன் தரத்தா சொல்றாங்க.. அது வரைக்கும் ..."என்று கெஞ்சி சமாதானப்படுத்தினாள்.அவர்களின் பாசமலரை பார்க்க முடியாத தீபக்
" நீங்க தனியா கொஞ்சுக்கோங்க நான் வரேன்
.." என்று தப்பிக்க பார்க்க
" டேய் அண்ணா உன்கிட்ட நிறைய கேட்கணும்டா.. ஏண்டா இப்ப எல்லாம் போன் பண்ணா அட்டென்ட் பண்ண மாட்ற ?"என்று கயல் கோபத்தில் கொதிக்க சனாவும் அவளோடு கை கோர்த்துக்கொண்டு
" ஆமா கயல் அண்ணா இப்ப எல்லாம் சரி இல்ல... இப்பதான் அண்ணா திருவள்ளூர் வந்துட்டாருல ஆனா என்ன பார்க்க சென்னைக்கு ஒருநாள் வாங்கனா வரமாட்டுறாரு கயல் கேளு?" என்று அவளும் கயலை ஏற்றிவிட கயலும் தீபக்கிடம் ருத்ரதாண்டவம் ஆடினாள்.
இருவரிடமும் மன்னிப்பு கேட்ட தீபக் சனாவிடம் கூடிய சீக்கிரம் அவளை பார்க்க வருவாக உறுதியளித்தான்.
YOU ARE READING
ஆயிரங்காலத்துப் பயிர்
Romanceஇரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...