கிறிஸ்டிலா தனது தாய் தந்தையிடம் ஆசி பெற்றாள்.
கிறிஸ்டிலா அன்று கூடுதல் ஒப்பனையுடன் கார்மெற்ட்ஸிற்கு போக தயாராகிக் கொண்டிருந்தாள். சனாவும் ஆர்.எல்லும் அவளை கிண்டல் செய்ய அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் கிறிஸ்டிலா தனது வெண்ணிறத் துப்பட்டாவை சரி செய்தாள். அவர்களுக்கும் வேலைக்கு நேரமானதால் புறப்பட்டனர். தேவ் அன்று கார்மென் ட்வின் குடியரசு சீக்கிரம் புறப்பட்டு விட" தேவ் ஏன் இவ்வளவு சீக்கிரம் போனாரு?" என்ற யோசனையுடன் கிறிஸ்டிலாவும் வீட்டு கதவை பூட்டிக்கொண்டு கார்மெண்ட் புறப்பட்டாள்." அபி நான் எதுக்கு அங்க?" என்று சனா போனில் அபியிடம் சொல்ல
" ராஜாதான் உன்னையும் வர சொன்னா. அவ பையன் பர்த்டேக்கு" என்றவன்
"வர தான சொன்ன இப்ப திடீர்னு உனக்கு என்ன ஆச்சு ராஜா கூட உன்னை நேர்ல வந்து கூப்பிட்டான்ல?"என்று அபி வருத்தப்பட சனா
" சரி நான் வரேன் கோபிக்காதே .ஈவினிங் சிக்ஸ்ஸோக் கிளாக் தானே. நான் ஆப்பீஸ் போயிட்டு அங்க வரேன் "என செல்போன் இணைப்பை துண்டித்தவள் ஆபீசுக்குள் நுழைந்தாள்."டேய் அபி நாங்க வரோம் !"என்று அபிராமியும் கைலாசும் புஷ்பா வீட்டு திருமணத்திற்கு தயாராகி நிற்க அபி அவர்களிடம் "அம்மா புஷ்பா சித்தி ரொம்ப கம்பெல் பண்ணி கூப்பிட்டாங்க.அதனால மட்டும்தான் நான் அந்த ஊருக்கு அனுப்புறேன். நீங்க அங்க யார்கிட்டயும் பேசாம நான் அரேஞ்ச் பண்ணியிருக்க ஹோட்டல தங்கி கல்யாணத்தை பார்த்துட்டு வந்துடுங்க "என்று அறிவுரை சொல்ல 'எத்தனை தடவ சொல்லுவ நாங்க என்ன சின்ன குழந்தையா" என்று அபிராமி தனது மகனை தடவைவிட" சரிமா ஊருக்கு போனதும் எனக்கு கால் பண்ணுங்க "என்று அவர்களை காரில் வழியனுப்பி வைத்தான்.
அம்மா அப்பா தங்கை என யாரும் இல்லாததால் வீடு அவனுக்கு தனிமையை தர அவன் வீட்டில் இருக்க பிடிக்காமல் அலுவலகத்திற்கு கிளம்பினான் .அலுவலகத்துக்கு சென்றவனுக்கு கல்லூரி நண்பன் ராஜாவிடமிருந்து போன் வந்தது. ராஜா தனது குழந்தை பிறந்த நாள் விழாவிற்கு தேவையான வேலைகளை செய்ய அபியை துணையாக அழைத்தான். அபியும் மதியம் வருவதாக சொல்லி போனை வைத்தான்.

YOU ARE READING
ஆயிரங்காலத்துப் பயிர்
Romanceஇரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...