கிறிஸ்டிலாவின் திமிரை அடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த அனிருத்துக்கு அடிமேல் அடி விழுவது போல கிறிஸ்டிலாவின் வேலையைப் பற்றி நல்ல செய்திகளே வந்தன. அதனால் அவனும் எதுவும் செய்ய முடியாமல் இருந்தான்.
சனாவும் கிறிஸ்டிலாவும் எப்பொழுதும் போல சண்டையிடுவது பிறகு சேர்ந்து கொள்வது என்று இருந்தனர்.
இப்படியே ஒரு மாதம் கழிய தேவிற்கும் புது புது ஆடர்களும் வந்தன
சனா அவளின் அலுவலகத்தில் நன்றாக வேலை பார்த்ததால் சம்பள உயர்வும் கிடைத்தது .இன்னும் மூன்று மாதங்களில் சனா "டீம் லீடர்!" பதவிக்கு உயர்வாள் என்ற செய்தியும் அவள் காதில் கேட்டதால் சனாவின் மனம் இறக்கை கட்டி பறந்தது.வேலை முடித்து கீழே வந்ததும் சாலையில் தனக்காக காத்திருக்கும் அபிலாஷிடம்
"அபி...இனி கொஞ்ச மாசம் தான் நான் உன்ன ஆபீஸ்ல சார்னு கூப்பிடுவேன். அப்புறம் நான் உனக்கு ஈகுவளாகிடுவடா!" என்று நக்கலாக சொல்லி விட்டு ஆட்டோவில் ஏறினாள்.அபிக்கு அவளின் வார்த்தைகளால் கோபம் ஏதுமில்லை.அவளின் வளர்ச்சி அவனுக்கு சந்தோஷமும் பெருமையும் தந்தது.
வேப்பத்தூர்....சனாவின் ஊரில் திருவிழாவை பற்றிய நோட்டீசுகள் அச்சடித்து வீடு வீடாக கொடுத்திருந்தனர் .வீட்டுக்கு 2000 ரூபாய் என்பது அனைவருக்கும் பெரிய தொகையாய் இருந்தாலும் அவ்வூர் அம்மன் கோவில் பெரிய கோவில் என்பதால் அதற்கு அவ்வளவு தான் செலவாகும் என்றும் அவர்களும் எண்ணினார்.
கிறிஸ்டிலா பெற்றோரை தனியாக விட்டு வந்துள்ளதால் அவர்களை அடிக்கடி சென்று பார்த்துக் கொள்ளும்படி சனா கயலிடமும் சாணக்கியரிடமும் சொல்லி இருந்தாள்.
அதனால் அவர்களும் அடிக்கடி அங்கு சென்று பார்த்துக் கொண்டனர் .
கிறிஸ்டிலாவும் சனாவும் தங்களது வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் தேவ் அலுவலகம் சென்று பார்வையிட்டு அவனுக்கு உதவி செய்தனர்.
கிறிஸ்டிலாவின் காபிக்கு அடிமையாகிய தேவ் தலை வலிக்கும் போது காபியினை தேவைப்படுவதால் அவளிடம் காலையிலேயே காபி வாங்கிக் கொண்டு அதனை அலுவலக நேரங்களில் தலை வலிக்கும் பொழுது அருந்துவான்.
தேவிற்கு புதுப்புது ஆர்டர்கள் நிறைய கிடைத்ததால் அவனுக்கு வேலை பளு அதிகரித்தது. பதினைந்து ஊழியர்களை இருபதாக்கினான். ஒரு ஆர்டரை முடிப்பதற்கான காலக்கெடு நெருங்கிவிட்டதால் ஞாயிறு என்றும் பாராமல் அலுவலகத்திற்கு புறப்பட்டான். ஊழியர்கள் சம்மதத்துடன் தான் அவன் ஞாயிற்றுக்கிழமை வேலை வைத்தான். 8: 00 மணக அளவிற்கு அவன் கார்மன்ட்ஸ் கதவினைத் திறந்து அன்றைய வேலைக்குத் தேவையான மெட்டீரியல்ஸ் எல்லாம் அடுக்கி வைத்தான்.
YOU ARE READING
ஆயிரங்காலத்துப் பயிர்
Romanceஇரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...