10

92 4 1
                                    


சனா ரோஜாப்புற தாவணியில் விரிந்த கூந்தலில் மல்லிகை பூவை வைத்துகொண்டு அவள் முக அசைவிற்கு ஏற்ப ஆடும் ஜிமிக்கினையும் குளிரின் சிவந்த கன்னத்தையும் அமுக்கிகொண்டு கணினியில் மூழ்கி இருந்தாள்.
ரோஜாப்பூ நிற தாவணியில் சனாவை  பார்த்ததும் அபிலாஷின் மனதில் மலரும் நினைவுகள் ஞாபகத்தில் வந்தன..

அபிலாஷ் ஆறாவது படிக்கும் பொழுது பருமனாக இருப்பான் .அதனால் அனைவரும் அவனை மிகவும் கிண்டல் அடிப்பர். அந்த வருட தீபாவளி அன்று சனா பட்டுப்பாவாடை சட்டை அணிந்து கொண்டு அபிலாஷ் வீட்டிற்கு வந்தாள் .அவள் வந்ததும் அபிலாஷ் வீடே குதுகலமானது. அங்கு அவள் அனைவருக்கும் செல்லம்
அப்பொழுது 4 வயது குழந்தை சனாவின் தங்கை கயலும் அவளுடன் வந்திருந்தாள்.
பழி தவிற மற்ற  அனைத்து குழந்தைகளும் அபிலாஷ் வீட்டுமுன் பட்டாசு வெடித்தனர்.
தீபக்கின் நண்பர்களும் தீபக்குடன் அங்கு பட்டாசு வெடித்தனர் . அபிலாஷ் அவனது மூக்கு கண்ணாடியை சரி செய்தவாறே குனிந்து பட்டாசை பற்றவைக்க பயந்து கொண்டிருந்தான். மற்றொரு பக்கம் சனா கயலும் அங்கிருக்கும் மற்ற பெண் குழந்தைகளுடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தீபக்கின் நண்பன் ஒருவன் அபிலாசை அழைத்து
"டேய் தடியா இந்த தொப்பைய  வளர்த்திருக்கல ஒரு பட்டாசு வெடிப்பதற்கு இப்படி பயப்படற?" என்று அவனின் தலையில் கொட்டி சிரித்தான்.
அதனை பார்த்த தீபக் "மணி அவனைவிடுடா. அவன் சின்ன பையன்! அவனை போய் கிண்டல் பண்ற வாடா !"என்று தனது நண்பனை அழைக்க அவனோ அதனை எல்லாம் காதில் வாங்காமல் அபிலாஷை கிண்டல் அடித்துக் கொண்டிருந்தான்.அபிலாஷிற்கு  கண்ணே கலங்கியது.

"அண்ணா அவனை போக சொல்லு !"என்று கோபத்தில்  கத்த முடியாமல் கத்திய அந்த மெல்லிய குரல் கேட்டு யார் என்று அனைவரும் திரும்பி பார்த்தனர்.
சனா ஒரு கையில் பட்டாசும் மற்றொரு கையில் ஊதவத்தியுடன் தனது கூந்தலை விரித்து விட்ட வண்ணம் சிறு காளியாய் நின்றுக்கொண்டிருந்தாள்.
"அண்ணா அவன் அபியை கிண்டல் பண்றா நீ சும்மா பார்த்ததுட்டு நிக்குற!"என்று தீபங்களை திட்ட அவனோ அவளை அமைதிப்படுத்தும் முயற்சியில் "சனா இரு நான் இவன கூட்டிட்டு போற! "என்று சொல்ல சனா கோபத்தின் உச்சியில் "முதல்ல சாரி கேட்க சொல்லுனா!அப்புறம் கூட்டிட்டு போவ!"என்று பிடிவாதமாய் சொல்ல
"என்னது சாரியா? குண்டன குண்டானு பயந்தாங்கோலிய பயந்தாங்கோலியுனுதான் கூப்பிடுவாங்க. நான் ஏன் சாரி கேக்கணும்?" என்று கையை உயர்த்திப் பேச
"நீ மட்டும் சாரி கேட்கல நான் உன்மேல பட்டாசை கொளுத்திப் போட்டுவேன் !"என்று கையில் இருக்கும் மிளகாய் பட்டாசை காண்பிக்க மணி என்று விழுந்து விழுந்து சிரித்தான்.
அவன் சிரிப்பை நிறுத்தும் வகையில் சனா பட்டாசை அவள் காலருகே போட 'டம்டம்' என்ற சத்தம் தான் அவன் சிரிப்பை அடக்கியது .
"நீ மட்டும் சாரி சொல்லல !"என்று அவனருகில் வந்த சனாவை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தவன்
" முடியாது!" என்று சொல்ல அவள் மற்றொரு பட்டாசை அவன் தொடை அருகே கொண்டு வர பயந்தவன் "சாரி ....."என்று பயத்தில் ஓடினான்.
ஓடியவனை பார்த்து சிரித்த தீபகிடம்
"உனக்கும் தான் சாரி கேளுணா!"
" நானா ?"
"ஆமா !அவன் கிண்டல் பண்றா நீ பார்த்துட்டு அப்படியே நிக்குற!" என்று சொன்னதும் அவளின் கையில் இருந்த பட்டாசை  பார்த்ததும் தீபக்கும் பயந்து அபிலாஷிடம்" சாரி.." கேட்டுவிட்டு விட்டால் போதும் என்று ஓடினான்.

ஆயிரங்காலத்துப் பயிர்Where stories live. Discover now