தேவ் பேங்கிற்கு சென்று பணத்தை எடுப்பதைப் பற்றி விசாரிக்க அவர் அதனை எடுத்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அலுவலகத்தில் தெரிவித்தனர் .ஆனால் பேங்கில் அவன் எதிர்பார்த்த அளவுக்கு பணம் இல்லை என்பது தெரிந்தது .அது எப்படி குறைந்தது என்று விசாரித்ததில் படிப்பு செலவிற்காக கார்டியனான லோகேஷ் எடுத்து செலவு செய்ததாக பேங்க் மேனேஜர் தெரிவித்தார் .
"எல்லாம் நான் பண்றனு எத்தனை தடவை சொன்னாரு? எல்லாம் எங்க அப்பா பணம் தானா!" என்று யோசித்தவன் பிறகு
" இதுவும் நல்லதுதான் இல்லனா அவர் பணத்துல வாழ்ந்தோமேனு வருத்தப்பட்டிருப்ப!" என்று மனதினை சமாதானம் செய்துக்கொண்டான்.
தேவிற்கு தன் மீது பெற்றோர் பணம் சேமித்து வைத்தனர் என்பது தெரியும். ஆனால் அது எவ்வளவு என்பது தெரியாது அதனை தெரிந்து கொள்ளவும் அவன் முயற்சிக்கவில்லை. ஏனென்றால் அதற்கான அவசியம் ஏற்படவில்லை." இப்பொழுது என் அக்கவுண்ட்ல எவ்வளவு பணம் இருக்கு?" என்று அவன் கேட்க
"சர் இப்ப உங்க அக்கவுண்ட்ல டூ லாக்ஸ் இருக்கு!" என்று பேங்க் மேனேஜர் சொன்னதும்
"அப்ப எங்க அப்பா அம்மா சேர்த்து வைத்த பணம் எல்லாத்தையும் அவரு எடுத்துட்டு இருக்காரு
இது தெரியாம சின்ன வயசுல அவரு சைன் கேட்டா போட்டு இருக்கோம்!" என்று வருந்தியவன்
"ஓகே சார் நான் இந்த பணத்தை வித்டிரா பண்ணிக்கலாமா ?"
"சேவிங்ஸ் அக்கவுண்ட் மணி வித்டிரா பண்ண கொஞ்ச பார்மாலிட்டீஸ் இருக்கு.டூ டேஸ் ஆகும்!" என்று சொன்னதும் அவனும் இரண்டு நாள் கழித்து வருவதாக கூறி வெளியேறினான்.வேப்பத்தூர்......
அம்மன் கோவிலில் வெளியே இருந்த ஆலமரத்தடியில் ஊரின் பெரியவர்கள் ஒன்று கூடினர் .
சனாவின் தந்தை சாணக்கியருக்கு அந்த ஊரில் தனி செல்வாக்கு .ஊருக்கு எதுவாக இருந்தாலும் அதனை அவரிடம் கேட்காமல் செய்ய மாட்டார்கள். அன்றும் ஆறு மாதத்திற்கு பிறகு நடக்கப் போகும் ஊர்த்திருவிழாவைப் பற்றி பேசுவதற்காக கூடியிருந்தனர். அப்போது வயது முதிர்ந்த ஒருவர் தெளிவில்லாத குரலில்
"யப்பா சாணக்கியா !இந்த வருஷம் எப்பயும் போல கோவில் திருவிழா பண்ணிடலாமா?"என்று கேட்க
" ஆமா சித்தப்பா! எப்பயும் போல ஒரு வாரம் கூத்து எப்பயும் போல பல்லக்கு விழா மற்றதெல்லாம்" என்று அவர் சொல்லி முடிக்க கூட்டத்தில் இருக்கும் மற்றொரு பெரியவர்
"அப்ப இந்த தடவை ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு வாங்கலாம்?" என்று கேட்க
" இப்போ மொத்தம் எவ்வளவு ஆகும் நீங்க தான் கணக்கு போட்டு சொல்லணும். இந்த பண விஷயத்துல என்னை இழுக்காதீர்கள்" என்று சாணக்கியர் பின்வாங்க
"ஆமாப்பா அப்புறம் பணம் ஏதும் காணாம போச்சுன்னா அவர் நிலத்தை விற்று தான் தரணும்! ஏற்கனவே இவர் பாதி சொத்தை விற்றுவிட்டாரு!" என்று மூர்த்தி சிரித்து சொல்ல அங்கு அவருக்கு மட்டும் தான் சிரிப்பு வந்தது.
YOU ARE READING
ஆயிரங்காலத்துப் பயிர்
Romanceஇரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...