30

71 3 3
                                    

30
அரை மணி நேரமாக ஆட்டோவிற்காக காத்திருக்க ஆட்டோ கிடைக்காததால் வெறுத்துப்போன கிறிஸ்டிலா தேவுடன் பைக்கில் ஏறினாள்.
வண்டியை எடுத்த தேவ் வண்டியை ஓட்ட ஆரம்பிக்க இரவு நேரம் என்பதால் சில்லென்ற காற்று இருவரை கூசி சென்றது. அந்த குளிர் காற்று இருவரையும் சிலிர்க்க வைக்கும் என்று எதிர்பார்த்தால்  அது ஏமாற்றம்தான் .ஏனென்றால் இருவரும் ஒன்றாக பயணிப்பதின் நெருக்கத்தை  உணர்ந்துக் கொண்டிருந்ததால் இருவரின்  மனமும் ஒரு நிலையிலில்லை.  காற்றின் வேகத்தில் பின்ன படாத கிறிஸ்டிலாவின் கூந்தல் தேவின் முகத்தில் பட அதில் சிலிர்த்தவனுக்கு அந்தப் பயணம் இனிமையே.
வீடு வந்ததும் கிறிஸ்டிலா மலர்ச்சியுடன் இறங்கி உணவு சமைத்து வருவதாகச் சொல்லிச் செல்ல தேவ் வேளை அலுப்பு நீங்க குளித்து முடித்தான். அந்த இடைவெளியில் கிறிஸ்டிலா தன்னால் முடிந்த உப்புமா செய்து வந்து அவனிடம் கொடுக்க
" நீ அங்க தனியா தானே சாப்பிடுவ இன்னிக்கு  என்கூட சாப்பிட்டு போ!" என்று சொல்ல அவளுக்கும் தனியாக சாப்பிடுவது பிடிக்காததால் அவளும் ஒரு தட்டில் உப்புமா போட்டு கொண்டுவந்தாள்.
உப்புமாவை உண்டுக்கொண்டிருந்த தேவ்
" என்ன ஏன்  முட்டக்கண்ணு கூப்பிடுற?" என்று தன் மனதுக்குள் இருந்த நீண்டநாள் கேள்வியைக் கேட்க
"உங்க கண்ணு என்ன சின்னதாவா இருக்கு?" என்று அவள்  கிண்டலடிக்க தேவ்
" ஆனால் எங்க அம்மா எனக்கு கண்ணுதான் அழகா இருக்குன்னு சொல்லுவாங்க!" என்று தன் அம்மாவின் ஞாபகத்தில் மூழ்க்கினான்

" அது என்னவோ கரெக்டு தான் .."என்று  அவள் தன்  மனதில் சொல்லிக் கொண்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தேவிடம்
"உங்க அம்மா உங்கள எப்படி கூப்பிடுவாங்க?"
" பப்புனு கூப்பிடு வாங்க!" என்று சொல்ல
உப்புமாவை உண்டுக்கொண்டிருந்தவள் புரையேறி  தன்னையும் மறந்து
" பெரிய பருப்பு...பப்புனு கூப்பிடுவாங்களா.. முட்டகண்ணு பெயர் எவ்வளவு நல்லா இருக்கு
...." என்று சத்தமாக சொல்லி விட
"என்ன சொன்ன?" என்று  அவன் முறைத்தான். அந்த முறைப்பை பார்த்த அவள்
" ஐயோ சத்தமா சொல்லிட்டோமே " என்று தலையிலடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட பார்க்க அவளின் பின்னாடி ஓடிச் சென்று அவளின் கையை பிடித்து நிறுத்தியவன் அவளை சுவற்றில் தள்ளி அவளின் கையை இறுக்கிப் பிடித்து
" என்ன சொன்ன?" என்று புருவத்தை உயர்த்த
" பெரிய பருப்பானு  கேட்ட ?முதல்ல கைய விடுங்க தேவ்" என்று அவனை  தள்ள பார்க்க
"சாரி பப்புன்னு சொல்லு விடுற"என்று அவன் பிடிவாதமாக கூற அவள் கையை விடுவிக்க முயற்சித்தாள் .
அந்த பிடியில் இருந்து வெளி வர முடியாததால் கடைசியில்
" சாரி பப்பு" என்று தலைகுனிந்து அவனிடம் சொல்ல  அவளின் கன்னத்தை பற்றி முகத்தை உயர்த்தியவன் "தட்ஸ் குட்" என்றான்.அவன் பிடித்திருந்தது கையினை எடுத்துக்கொண்ட கிரிஸ்டல் எதுவும் பேசாமல் தன் வீட்டிற்கு ஓடினாள்.
மறுநாள் கிறிஸ்டிலா உணவு எடுத்துக் கொண்டு ஆபீசுக்கு கிளம்பி விட அந்த நாள் முழுவதும் அவளுக்கு வேலையில் கழிந்தது .
ஆனால் தேவின் மனம்ஒரு நிலை கொள்ளாமல் தவித்தது .
"இன்னிக்கு நைட்  நான் வந்து விடுவேன்!" என்று சனா கிறிஸ்டிலாவிற்கு தொலைபேசி மூலம் தெரிவித்தாள்.
அன்று நேரத்தோடு கிறிஸ்டிலா வீட்டிற்கு திரும்பினாள்.
சனா 9 மணி அளவில் சென்னையை வந்தடைந்தாள். ஆட்டோ பிடிக்க சாலையில் காத்து கொண்டிருந்தவள் பின் அவளை மூன்றுபேர் கண்ணை விரித்து பார்த்துக்கொண்டிருந்தனர் .
அதனை அறிந்து கொண்டு சனா அபிலாஷிற்கு தான் இருக்கும் இடத்தின் முகவரியை குறுஞ்செய்தியிவ் அனுப்பினாள்.
அந்த மூவரின் பார்வையை அவளுக்கு பயத்தையும் அருவருப்பையும் தந்தது .சனாவின் குறுஞ்செய்தியை பார்த்த அபி
" எனக்கு தெரியும் சனாக்குட்டி என்ன நீ வர சொல்லுவேனு. என்ன பாக்காம உன்னால இருக்க முடியாது" என்று திறன்பேசியை பார்த்து புன்னகைக்க
" அண்ணா என்ன போன பார்த்து சிரிக்குற?"என்று விடுமுறையில் வந்துள்ள பவி அவனை கேட்க அவன் என்ன சொல்வது என்று விடை தெரியாமல் விழித்தான்.
"நான் போனை பார்த்து சிரிச்சா இதுல என்ன இருக்கு அதை பார்த்து சிரிக்கிறனு கேட்ப.. உன் போன்ல என்ன இருக்கு அதை பார்த்து சிரிக்குற" என்று அபிலாஷின் போனை பிடுங்க வர அதனை தடுத்த அபி
" ஒன்னும் இல்லை..." என்றான் .
"அப்ப ஏன் சார்  சிரிச்சிங்க?"என்று பவி விடாமல் கேட்க
"ஒரு மீம்ஸ் பார்த்தேன் அதான் சிரிச்சேன்!"என்று அவளை சமாளித்தான்.

ஆயிரங்காலத்துப் பயிர்Where stories live. Discover now